முன்னாள் திமுக அமைச்சர் சுரேஷ்ராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நாகர்கோயில் மண்டலம் கிள்ளியூர், ஏழுதேசம், கல்லுக்கூட்டம் ஆகிய 13 பேரூராட்சியில் சாலை வேலை ஒப்பந்த பணிகளுக்காக 19 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தேர்தலுக்கு முன்பு ஒப்பந்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. 2 கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தம் விடுவதற்கு, 15 நாட்களுக்கு முன்னர் பத்திரிகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தம் வழங்குவதற்கு 6 நாட்கள் முன்பு மட்டுமே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 


 




இதனால், ஒரு சிலருக்கு சாதகமாக அரசு அதிகாரிகள் செயல்பட்டு ஒப்பந்தம் வழங்கியுள்ளனர். இது போன்று ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் விடப்பட்ட ஒப்பந்த அறிவிப்பில் முறைகேடுகள் நடந்துள்ளன. சாலை மேம்பாட்டிற்கென விடப்பட்டுள்ள டெண்டர் அறிவிப்பு முறைகேட்டை சரிசெய்ய உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே விதிமுறைகளை பின்பற்றாமல் விடப்பட்டுள்ள இந்த ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.





 


கடலூரில் ஒன்றாக இணைந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ்


இந்த மனுவை விசாரித்த இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, டெண்டர் முறைகேடு குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.