தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 3 திட்டப் பகுதிகளில் 1,223 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் உள்ளன. மேலும் 4 திட்டப் பகுதிகளில் 1,104 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளன. இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகள் அந்தந்த நகராட்சிக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை மறுகுடியமர்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Sri lanka : இலங்கையின் அடுத்த அதிபர் யார்? தமிழ் எம்பிக்களின் ஆதரவு யாருக்கு?
மேலும், நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வீடுகளை அரசு மானியத்துடன் பயனாளிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி வரை 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இந்த முகாம்கள் தேனி தாலுகா அலுவலகம், சின்னமனூர், போடி, கூடலூர் நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. முகாமில் அடுக்குமாடி குடியிருப்பு தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடோ, வீட்டு மனையோ இருக்கக்கூடாது. மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பயனாளியின் பங்களிப்பு தொகையை செலுத்துவதற்கான சம்மதக்கடிதம் இணைக்க வேண்டும். விண்ணப்பதாரர் முன்பணமாக ரூ.10 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்