பொதுமக்களுக்கு பத்திரிகை மற்றும் அர்ச்சனை, விபூதி ,பிரசாதம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி திருக்கார்த்திகை போன்று கும்பாபிஷேக தேதியில் மாலை சூர்ய அஸ்தமனத்திற்கு முன்பாக வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

Continues below advertisement

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

- 7 அடி உயர முள் படுக்கையில் படுத்து பெண் சாமியார் அருள்வாக்கு...குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்

Continues below advertisement

எதிர்பார்ப்பை கிளப்பிய ராமர் கோயில் கும்பாபிஷேகம்:

கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாதுரி தீட்சித், அனுபம் கெர், அக்‌ஷய் குமார் மற்றும் பிரபல இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஶ்ரீராம ஜென்மபூமி  தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். அதுமட்டும் இன்றி, நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் கும்பாபிஷேக அழைப்பிதழை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை  பகுதியில் பாஜக மாவட்ட தலைவர்  மேப்பல் சக்தி ஆலோசனைப்படி அமைப்புசார அணி  மாவட்ட துணைத் தலைவர் தவமணி தலைமையில் பொதுமக்களுக்கு பத்திரிக்கை மற்றும் அர்ச்சனை, விபூதி ,பிரசாதம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி திருக்கார்த்திகை போன்று கும்பாபிஷேக தேதியில் மாலை சூர்யா அஸ்தமனத்திற்கு முன்பாக வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர். இதில் மாவட்ட செயலாளர் லட்சுமி காரைக்குடி சட்டமன்ற பொறுப்பாளர் சிம்ம ராஜா நகர பொதுச்செயலாளர் சுப்பிரமணி நகர துணைத் தலைவர் விஜயா மற்றும் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
 

இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பரபரப்பை கிளப்பி வந்த அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என பொது மக்களை பிரதமர் மோடி சமீபத்தில் கேட்டு கொண்டார் என்பதும் குறிப்பிடதக்கது.