தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வாழ்வியலையும் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி உலகப் பிரசித்தி பெற்றது. முக்கியமாக இதில் மதுரை மாவட்டத்தில்  அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களிலும் நடைபெறுவது வரலாற்று சிறப்பு வாய்ந்தது.


- Madurai Okha Train: மதுரை - ஓஹா ரயில் சேவை நீடிப்பு; திருக்குறள் எக்ஸ்பிரஸ் புறப்படுவதில் தாமதம்




தை முதல் நாள் பொங்கல் அன்று அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான மக்கள் வருகை தருவார்கள். இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் கிராமத்திலேயே 7-வது தலைமுறையாக ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் குடும்பத்தினரை சந்திக்க சென்றோம். தற்போது அந்த குடும்பத்தில் மாடு வளர்க்கும் ராஜ் குமார் அவரின் கட்டுத்தரையில் காளைகளை காண்பித்தார். தனது வீட்டில் 4 ஜல்லிக்கட்டு காளையும், நண்பர்கள் பராமரிப்பில் மற்ற காளையும் வளர்க்கும் ராஜ்குமார் கிட்டதட்ட 13  காளைகள் வளர்த்து வருகிறார். விவசாய பணி, ஜல்லிக்கட்டு காளை, பசுக்கள்,கோழி, சேவல் என பல்வேறு விவசாய பணிகளையும், சிறிய அளவு டிரான்ஸ்போர்ட் தொழிலும் செய்கிறார்.




இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தான் காளைகளை திறம்பட வளர்த்து வாகை சூடுகிறார். அப்பா மாரியின் பெயரில் ஜல்லிக்கட்டில் காளையை அவிழ்த்து பெருமை கொள்கிறார். காளைகளின் வெற்றி தோல்வியை சமமாக கருதும் இவர் மாடு பிடிகாரர்களையும் பாராட்டா தவறுவதில்லை எனவும் தெரிவிக்கிறார். மற்ற நாட்களில் காளைகளை பசுவைப் போல் சாதுவாக வளர்க்கும் இவர் ஜல்லிக்கட்டு நடைபெறும் சமயத்தில் காளைகளுக்கு நடை பயிற்சி, மண் குத்தும் பயிற்சி, நீச்சல் பயிற்சி சத்தான உணவு முறையென கொம்புவச்ச சிங்கமாக மாற்றுகிறார். நண்பர்கள் யாராச்சும் தங்களின் காளை விற்க முயன்றால் அதையும் தானே வாங்கி பராமரிப்பதாகவும் தெரிவிக்கிறார். சமீபத்தில் தான் வாங்கிய காளைக்கு தனது மகன் சிம்பா என்று கார்டூன் சிங்கத்தின் பெயரை வைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.




ராஜ்குமாரின் குடும்ப பெண்கள் நம்மிடம் பேசுகையில்..,” எங்கள் வீட்டில் எப்போதும் காளை நிறைந்திருப்பது தான் பெருமை. வீட்டில் ரேஷன் கார்டில் தான் பெயர் இல்லை. மற்றபடி அவைகளும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் தான். எங்க ஊரில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடக்கும். அந்த சமயத்தில் நிறைந்து இருப்பாங்க. எங்களுடை காளைய ஜோடித்து களத்து கொண்டு செல்லும் போது பெருமையா இருக்கும். காளை ஜெயித்தாலும் தோத்தாலும் ஒரே மாதிரி தான் கவனிச்சுக்குவோம். காளை நல்லா விளையாண்டுச்சானு தான் பாக்கனும். ஜல்லிக்கட்டுக்கு போகும் போது, போட்டிக்கு போய்டு திரும்பிட்டு வரும்போதும் அதுகள பக்குவமா பாத்துக்குவோம். களத்தில கோவப்பட்டு வரும் காளைகளுக்கு 2 நாளைக்கு மேல கோவம் இருக்கும். கொஞ்ச நாள் போச்சுனா குழந்தையா மாறிடுங்க. ஜல்லிக்கட்டு வளர்க்கும் வீட்டில் பெண்களும் புருஞ்சு வளத்தாத தான் நல்லபடியா கொண்டு செலுத்த முடியும்” என்றனர்.






இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rajinikanth: "எல்லாருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்” - ரசிகர்களை சந்தித்து ரஜினி புத்தாண்டு வாழ்த்து..!


மேலும் செய்திகள் படிக்க - Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” பட விமர்சனம்!