சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று 14.1.2024 பங்கேற்பாளர் தினம் மேலூர் பழையசுக்காம்பட்டி கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை நேரு யுவ கேந்திரா மற்றும் வின் ஸ்டார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு திறன் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
மஞ்சள் பை விழிப்புணர்வு:
மேலும் மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கிராம மக்களுக்கு 500 மஞ்சள் பை வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்ற 100 குழந்தைகளுக்கு மீண்டும் மஞ்சள் வாசகம் நிறைந்த ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது. மஞ்சள் பை விழிப்புணர்வு பிரச்சார பைகளை மதுரை சுப்பு ஹோட்டல் உரிமையாளர் நவனீதன் வழங்க மேலூர் நகர் மன்றத் தலைவர் முகமது யாசின் பெற்றுக் கொண்டார். மேலும் இந்த விழாவில் பங்கேற்பாளர் தினம் குறித்து புலவர்.கா.காளிராசா சிறப்புரையாற்றினார்.
மேலும் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸை மாணிக்கம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி உமா வெளியிட சிவகங்கை கூட்டுறவு வங்கி மேலாளர் மலைச்சாமி மற்றும் மேலூர் அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் பஞ்சவர்ணம் பெற்றுக்கொண்டார். விழாவில் மஞ்சள் பை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் வெளியிடப்பட்டது.
பங்கேற்பாளர் தின மேடையில் புலவர் கா.காளிராசா கூறுகையில்..,” கிராமபுற மாணவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியடைய வேண்டும். கல்வியில் பெரும் பங்கை அளித்து பதவியடைய வேண்டும். நான் ஆரம்ப காலகட்டத்தில் மேலூர் பகுதியில் தான் தனியார் பள்ளியில் பணி செய்தேன். தொடர் முயற்சியால் அரசுப் பணிக்கு சென்று ஆசிரியர் பயிற்றுனராக மாறியுள்ளேன். இதற்காக நான் பள்ளி பருவம் முதல் ஆசிரியராக ஆகவேண்டும் என கனவு கண்டு, கடினமாக உழைத்தேன். அதே போல் இங்குள்ள ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி எடுத்து நல்ல நிலைக்கு வரவேண்டும்” என வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் சிவகங்கை கூட்டுறவு வங்கி மேலாளர் மலைச்சாமி கூறுகையில்,” எனது தந்தை கடலை வியாபரம் செய்து தான் என்னை படிக்க வைத்தார். தற்போது நான் மேலாளராக உயர்ந்துள்ளேன். என்னுடை இரண்டு மகன்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகின்றனர். பழையசுக்காம்பட்டி கிராமத்தில் பல மாணவர்கள் முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும். பல்வேறு சாதனைகள் செய்து வெவ்வேறு துறைகளும் தலைமை பொறுப்பை அடையவேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!