மதுரை மாநகராட்சி வரி செலுத்துவோர் சார்பில், தமிழக அரசு விடுத்துள்ள வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது. “எடப்பாடியார் ஆட்சி காலத்தில், வரி உயர்த்தும் சூழ்நிலை ஏற்பட்ட போது, அதை மக்களிடத்தில் திணிக்க மாட்டேன்” என்று கூறினார். தற்போது முதலமைச்சர் வரியை உயர்த்த மாட்டேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார், ஆனால் இன்றைக்கு 150 % அளவில் வரியை உயர்த்தி உள்ளனர். தற்போது தமிழகத்தில் 80 லட்சம் வீட்டு வரி செலுத்துவோர் உள்ளனர். இதில் 601 முதல்1200 சதுர அடி வரை வீடு கட்டியசாமானிய மக்கள் தான் வசித்து வருகின்றனர், ஆனால் அவர்களுக்கு வரியை சுமத்தி கொடுங்கோல் ஆட்சியை திமுக அரசு நடத்தி வருகிறது.

 


மக்களை வாழட்டும் வீட்டு வரி உயர்வை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, கழக ரீதியில் உள்ள 75 மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின் கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கை சீர்கேட்டினை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதியை, கிடப்பில் போட்டுவிட்டு தற்போது திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு, விளம்பர அரசாக செயல்படுகிறது, டிவியை திறந்தால் முதலமைச்சர் முகத்தைத் தான் பார்க்க முடிகிறது, ஆட்சி சக்கரத்தை நடத்தி மக்களுக்கான, திட்டங்களை எதையும் செய்யவில்லை.  முல்லை பெரியார் பிரச்னையில் மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.


தற்பொழுது ரூட் கர்வ் என்பதை சுட்டிக்காட்டி, அணை நீர்மட்டத்தை 142 ஆக உயர்த்தாமல், தற்போது முல்லை பெரியார் மூலம் பத்து மதகுகளில்  மூலம் 3000 கன அடிக்கு மேல், கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் மூன்று முறை முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக தேக்கப்பட்டது இது ஒன்றும் முடியாத காரியம் அல்ல.





காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை, கர்நாடக அரசு மதிக்காமல் மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது நமது உரிமையை பறிக்க வண்ணம் ரூல்கர்வ் விதியை, தமிழக அரசு கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால், சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்கள் ராஜஸ்தான போல பாலைவனமாக மாறிவிடும்.  கேரளா அரசின் அழுத்தத்தை தமிழக அரசு தள்ளுபடி  செய்து, ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார பிறப்பு உரிமையை காப்பாற்றி, அணை நீர்மட்டம்142 அடியாக தேக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதுவரை முதலமைச்சர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. தற்பொழுது கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை குறித்து, அனிமேஷன் செய்த வீடியோ நெஞ்சத்தை அச்சம் கொள்ளும் வகையில், இரு மாநில உறவுகளுக்கு குந்தகம் விலைவிக்கும் வகையில், இந்திய அமைப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், ஒற்றுமைக்கு குந்தகம் விலைவிக்கும் வகையில், வெளியிடப்பட்டுள்ளது.


இந்த வீடியோ பதிவை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதற்குரிய தண்டனையை வழங்க கேரளா முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வீடியோவில் கற்பனைக்கு  மிஞ்சு வகையிலும், குழந்தைகளை பாதிக்கும் வகையிலும், கட்டிடங்கள் எல்லாம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் வகையில், அச்சத்தை ஏற்படுத்து வகையில் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர்.


தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் முல்லை பெரியார் அணைக்குறித்து தொடர்ந்து எங்களிடம் கேட்டுக் கொண்டு வருகிறார். ஆகவே சமூக வலைதளங்களில், கேரளாவில் வெளிவருவதற்கு நடவடிக்கை  எடுக்க வேண்டும். ஏனென்றால் இதுபோன்று முன்பு கேரளாவில் திரைப்பட நடிகர்கள், சமூக அலுவலர்கள் சில கருத்துக்களை வெளியிட்டார்கள், அப்போது கடுமையாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அவர்கள் பின் வாங்கினார்கள். முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக அரசு தீர்வு கணப்பட வேண்டும். இல்லையென்றால் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்” என்றார்.