திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வந்த இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் வருகை புரிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசுகையில், “கொடைக்கானல் ஆன்மிக பூமி 25 வருடங்களாக இங்கு விநாயகர் சதுர்த்தி நடைபெற்று வருகிறது, உலக புகழ்பெற்ற சுற்றுலா தலம் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்தாமல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தி பொதுமக்கள் பல இன்னல்கள் சந்தித்து வருகின்றனர். கொடைக்கானலில் வாகன ஓட்டுனர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை அரசு சந்தித்து இந்த இ-பாஸ் நடை முறையை மேல்முறையீடு செய்து முறைப்படுத்த வேண்டும், நட்சத்திர ஏரியில் 33 கோடி மதிப்பில் நடை பாதை பணிக்கு மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அது முறையாக நடக்காமல் நடைபயிற்சி செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. அதே போல சொத்து வரி, கடை வரி உள்ளிட்ட வணிகவரி அதிகப்படுத்தி உள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகுந்த இடையூறு அடைகிறார்கள், விடுமுறை நாட்களில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கொடைக்கானல் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும், காவலர்களின் போதை பொருள் ஒழிப்பு தீவிரம் அடைந்து உள்ளது. குறிப்பாக கஞ்சா காளான், விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, கொடைக்கானல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக உள்ளது, தேச விரோதிகளின் புகலிடமாக உள்ளது. தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக வெற்றி பெற வேண்டும் அதை தமிழக அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும், சிபி ராதா கிருஷ்ணனை ஆதரிக்க நாங்கள் விநாயகரிடம் பிரார்த்தனை செய்கிறோம். விண்வெளியில் ஒரு ஸ்பேஸ் ஸ்டேசன் அமைத்து இஸ்ரோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, அதே போலஅயன் டோம் வைத்து ராணுவத்தினர் எதிரிகள் வீசிய ஏவுகணைகளை தகர்த்தனர், இந்திய ராணுவம் சர்வதேச அரங்கில் தலை சிறந்த ராணுவமாக மாறி உள்ளது, இதற்கு விநாயக பெருமானுக்கு ஆயுத பூஜைகள் நடத்தப்படுகிறது” என்றார்.
மேலும், “அதிமுக பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணியானது திமுகவை வீழ்த்த எண்ணம் உடைய அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணையும், தவெக அரசியல் கட்சி அல்ல, அரசியலில் திமுகவின் ஏ டீம் தமிழக வெற்றி கழகம். தவெக, திமுகவை எதிர்த்து பேசுவார்கள், திமுகவின் கொள்கையை தான் பின்பற்றுகிறார். தவெக மாநாடு அரசியல் மாநாடு இல்லை. ரசிகர்கள் மாநாடு. ரசிகர்கள் பாவம், பவுன்சர்கள் தூக்கி வீசுகிறார்கள், ரசிகர்கள் மீது அக்கறை இல்லை, கருணையும் கிடையாது, எப்படி மாநாடு நடக்க கூடாது என்பதற்கு உதாரணம் இந்த மாநாடு, சேர் உடைப்பதை கலாச்சாரமாக நினைக்கின்றனர், பிஜேபியை எதிர்க்க திமுக செய்யும் ஏற்பாடு அதற்கு உதாரணம் கமல் ஹாசன், மக்கள் நீதி மையம், விஜய் வருங்கால கமல்ஹாசன். அது தமிழக வெற்றி கழகம் அல்ல வெட்டி கழகம்” என்று விமர்சித்தார்.
தவெக பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் ஆதரிப்போம் எனவும் கிறிஸ்தவ முஸ்லிம்களின் கூட்டணி, தவெக, ஆகும், ஆனால் இந்து மக்கள் கட்சி தவெக எதிர்ப்பு காட்சியாகும், தவெக இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவது எங்கள் நோக்கம் என்றும் தெரிவித்தார். பாமாகவில் நடைபெறுவது உட்கட்சி பிரச்சனை என்றும், திருமாவளவன் திமுகவின் கொத்தடிமை என்றும், தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் மவுனம் காத்தனர், திமுகவில் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை, தற்காலிக பணியாளர்கள் ஆசிரியர்கள் விஷயத்தில் நல்ல முடிவு எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார், இதில் திமுகவின் இரட்டை வேடத்தை அம்பல படுத்துவது தான் நோக்கம் என்றும்,விசிக தான் அருந்ததி மக்களுக்கு துரோகம் செய்கிறது என்றும் அருந்ததியர் மக்களை ஆணவ கொலை செய்வது விடுதலை சிறுத்தை கட்சி என்றும் தெரிவித்தார்,தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசாக இருக்கின்றது என்றும்,
வன்னியரசு ராமன் குறித்து அவதூறாக பேசி வருகிறார், வைரமுத்து மோசமாக பேசுகிறார் அவரை ஏன் கைது செய்யப்படவில்லை, பெண்களை பேசிய விவகாரத்தில் பொன் முடி கைது செய்யப்படவில்லை, இந்த அரசு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுகிறது, ஆனால் இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூற ஏன் முன்வரவில்லை,அனைவருக்கமான அரசு என சொல்கிறது, ஆனால் ஒரு தலை பட்சமாக இந்த அரசு செயல்படுகிறது, இந்த மாதிரியான அரசு அகல வேண்டும் என்பது தான் தனது நோக்கம்,தங்களது பிரார்த்தனை என்றும் மீண்டும் எடப்பாடி முதலமைச்சராக வரவேண்டும்,அனைத்து துறைகளிலும் ஊழல்,போதை பழக்க சீர்கேடு உள்ளிட்டவைகளில் இருந்து மக்களை காப்போம் தமிழகம் மீட்போம் என எடப்பாடி கூறுவதாக இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டியளித்தார்.