ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "பரமக்குடி தாலுகா, உலகநாதபுரம் கிராமம் விரைவாக வளர்ச்சியடைந்து வரும் பகுதி இங்கு ஏராளமான வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அருள்பிரகாஷ் என்பவர் திருமண மண்டபம் கட்டுவதற்காக நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட உதவி இயக்குநர் அனுமதியளித்துள்ளார். ஆனால், அனுமதியை மீறி லாட்ஜ் (விடுதி) கட்டி வருகிறார். சுற்றுப் பகுதியில் போதுமான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பார்க்கிங் வசதி இல்லை. இரண்டாவது மாடியில் திருமண மண்டபத்தின் தேவைக்காக 10 அறைகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், லாட்ஜ் தேவைக்காக 15 அறைகள் கட்டப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திருச்சி: நாவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு - மாடு முட்டியதில் சாலையில் நடந்து சென்றவர் உயிரிழப்பு
கழிவு நீர் வெளியேற்றுவதற்கான முறையான வடிகால் அமைக்கப்படவில்லை. தீ விபத்து காலங்களில் அவசர வாகனங்கள் வந்து செல்ல 6 மீட்டர் இடைவெளி இல்லை. இதனால், அவசர காலங்களில் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. இதனால், சுற்றுப் பகுதியிலுள்ள பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பணிகள் முடிந்து, சான்றிதழ் பெற்று திருமண மண்டபம் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. எனவே, திருமண மண்டபத்திற்கு பணிகள் முடிந்ததற்கான சான்றிதழ் வழங்கத் தடை விதித்தும், மின் இணைப்பு வழங்கக் கூடாது என்றும், முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு சீல் வைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டியால் வந்த வேதனை - ஊரடங்கு விதிகளை மீறியதாக 40 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், திருமண மண்டபம், லாட்ஜ் விதிமுறைகளை மீறி கட்டபட்டுள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர், நகர்-ஊரமைப்பு திட்ட உதவி இயக்குநர், மற்றும் மண்ட உரிமையாளர் உள்ளிட்டோர் தரப்பில் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்