சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை தொல்நடைக் குழு, அரசு அருங்காட்சியகம் சிவகங்கை இணைந்து தமிழ்ச் சமூகத்தில் தொல்லியலின் தாக்கம் என்னும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கை நடத்தினர். இக்கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் வெண்ணிலா, வரவேற்க கல்லூரி முதல்வர் பொறுப்பு வகிக்கும் முனைவர் இந்திரா தலைமை வகித்தார். சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா முன்னிலை வகித்து உரை நிகழ்த்துகையில் கிராமப்புற மற்றும் வாய்ப்புக் குறைந்த மாணவர்கள் படிக்கும் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கு மாணவிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.




நிகழ்வை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், தொல்லியல் சான்றுகளை பாதுகாக்க வேண்டும் என்றார். பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு கென்யாவில் இருந்து வருகை தந்த கருத்துரையாளர் தொல்லியல் ஆய்வாளர் பாலமுரளி பேசுகையில்..," தற்போது தமிழகத்தில் தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு சார்ந்து பள்ளி மற்றும் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும். வெளிநாடுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் சான்றுகளும் தமிழக தொல்லியல் எச்சங்களையும் உள்ள வேறுபாட்டை எடுத்துரைத்து போது மாணவிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர். குறிப்பாக தமிழக பாறை ஓவியங்கள் மூலம் தமிழர்களின் பண்பாட்டு, கலசாரம் , அறிவியல் தொழில் நுட்பங்களை விளக்கினார். தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் இடங்கள் நமது பண்பாட்டு கருவூலங்கள் அவற்றை பாதுகாப்பதிலும் ஆவணப்படுத்துவதில் நமது பெருமையும் வரலாறும் அடங்கி இருக்கிறது" என்றார். 




தொடர்ந்து பேசிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர், "பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தின் நிறுவனர் பேராசிரியர் செல்ல பாண்டியன் தமிழ்ச் சமூகத்தில் தொல்லியலின் பங்கு என்ற தலைப்பில் நம் வாழ்வியலோடு தொல்லியல்  கலந்துள்ள நிலையும் தமிழக பண்பாட்டின் திருவிழா, சடங்கு முறை பழக்க வழக்க முறையின் முக்கியத்துவம் எடுத்துரைத்தார். சிவகங்கை தொல்நடைக் குழுவின் நிறுவநர் புலவர் கா.காளிராசா அவர்கள் தமிழ் எழுத்து மற்றும் கலாச்சார வளர்ச்சி குறித்து கணினி நழுவங்களுடன், எடுத்துரைத்தார். குறிப்பாக தமிழி எழுத்து வடிவ வளர்ச்சி, சிவகங்கை பகுதியில் இருக்கின்ற தொல்லியல் எச்சங்களை பற்றி மாணவிகளுக்கு விளக்கினார்.




சிவகங்கை தொல்நடைக் குழுவின் செயலாளர் நரசிம்மன் ,செயற்குழு உறுப்பினர் வித்யா கணபதி, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரி சாமி  கல்லூரி முதல்வர் முனைவர் இந்திரா இந்நிகழ்விற்கு முன்னே நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, வினாடி வினா ஓவியம் மற்றும் கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  சான்றிதழ் மற்றும் தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட பொருநை ஆற்றங்கரை என்ற  நூல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. கருத்தரங்கத்தில் பல்வேறு கல்லூரி சேர்ந்த பேராசிரியர்கள்  மாணவர்கள் உட்பட  300  மேற்பட்டோர் பங்கு பெற்றனர். அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்க ஏற்பாட்டினை  வரலாற்று துறை பேராசிரியர்கள், முனைவர் அஸ்வத்தாமன், முனைவர் முனீஸ்வரன் செய்திருந்தனர். நிகழ்வினை  மாணவி மூன்றாமாண்டு மாணவி பிரியதர்ஷினி தொகுத்து வழங்கினார். இறுதியாக மாணவி சுகன்யா  நன்றி உரை கூறினர்.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சிறந்த காளைக்கு டாடா ஏசி, சிறந்த மாடுபிடி வீரருக்கு ஆட்டோ பரிசு - தொட்டப்பநாயக்கனூர் ஜல்லிக்கட்டில் அசத்தல் !