தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக நடைபெறும். குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது. ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.
இதில், தை முதல்நாளில் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில ஆண்டுகளாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் கிராம கமிட்டியினர் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால் கடந்த 4 ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது ஓய்வுபெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் அரசே நடத்திவந்தது. இந்த ஜல்லிக்கட்டு விழாவினை நடத்தகோரி கிராம கமிட்டி மற்றும் தென்கால்பாசன விவசாயிகள் சங்கத்தினரிடைய கருத்துவேறுபாடு நிலவியதோடு போராட்டங்களும் நடைபெற்றது.
இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை மதுரை மாவட்டம் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து நடத்துவதாக மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார். இந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்க விருப்பமுள்ள நன்கொடையாளர்கள் பரிசுகளை வழங்கலாம் என அறிவிப்பு. பரிசுகளை வழங்கும் நன்கொடையாளர்கள் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எண்.9498042434-க்கும், மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் எண்.9498748708-க்கும் தொடர்புகொண்டு 14ஆம் தேதி மாலை 3 மணி வரை நன்கொடை வழங்கலாம் என அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்