கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அமராவதி அணையின் பிரதான கால்வாயை பழைய அமராவதி ஆயக்கட்டுக்கு திறக்க கோரி வழக்கு
குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு பழைய அமராவதி ஆயக்கட்டு முக்கிய ஆதாரமாக உள்ளது.
கரூரைச் சேர்ந்த மெய்கணமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு பழைய அமராவதி ஆயக்கட்டு முக்கிய ஆதாரமாக உள்ளது. அரசு கடந்த ஜூலை.20-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் புதிய அமராவதி ஆயக்கட்டுக்கு பாசனத்திற்காக நீர் திறக்க முடிவு செய்திருப்பதால், கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதுகுறித்து அளித்த மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. எனவே, தனது மனுவை பரிசீலித்து, பழைய அமராவதி ஆயக்கட்டுக்கு குடிநீர் தேவைக்காக அமராவதி அணையின் பிரதான கால்வாயை திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரித்த நீதிபதிகள், கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
