வன உயிரினங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்ட 4 விவசாயிகளுக்கு ரூ.94,500-  மதிப்பீட்டிலான நிவாரணத்தொகையை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.

Continues below advertisement

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வன உயிரினங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்ட 4 விவசாயிகளுக்கு ரூ.94,500-  மதிப்பீட்டிலான நிவாரணத் தொகையைமாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, வழங்கினார். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர். கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

வெப்ப அலை ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்ததாவது, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அதிகமான வெப்ப அலை ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வறட்சியைத் தாங்கும் பயிர்களை பயிர் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலமாக 100சதவீதம் மானியத்தில் 40 பண்ணைக்குட்டைகள் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் பண்ணைக்குட்டைகள் அமைத்திட முன்வரலாம். வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலமாக 25 உலர்களம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு  விரைவில் உலர்களம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரமான விதைகள் மற்றும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அறிக்கை செய்யப்பட்ட கண்மாய்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று 4 இடங்களில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Continues below advertisement

அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடையாமல் பாதுகாத்திட வனத்துறையின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் எதிர்பாராத வகையில் வனவிலங்குகளால் பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் 4 விவசாயிகளுக்கு ரூ.94,500- மதிப்பீட்டிலான நிவாரண உதவித்தொகை இன்று(24.07.2026) வழங்கப்பட்டது. விவசாயிகள் அளிக்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தார். இக்கூட்டத்தில் துணை இயக்குனர்(மேகமலை புலிகள் காப்பகம் திருவில்லிபுத்தூர்) ரவி மீனா, வேளாண்மை துணை இயக்குநர்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர்  சௌமியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.அ.அறுமுகம், வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) த.வளர்மதி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி. இந்திரா, பேராசிரியர் மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், இணை பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.