கொரோனா தொற்று காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக கள்ளழகர் மதுரைக்கு வர முடியாமல் போய்விட்டது. இருப்பினும் சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆகம விதிப்படி கோயில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றுது. சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டு இந்தாண்டு வழக்கமான சித்திரை திருவிழா நடைபெற உள்ளது.

 

 


 


உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா வரும் 5ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாவாக நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக வரும் ஏப்-14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும், 16ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவது போன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.






இந்நிலையில் விழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகள், பாதுகாப்பு, சுகாதாரப்பணிகள் குறித்து இந்துசமய அறிநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திருவிழாவில் கலந்துகொள்ளக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.




இதில் மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாநகர காவல்துறை துணைஆணையர் மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை ஆணையர் அனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அழகர் புறப்பாடு, எதிர்சேவையின் போது நடமாடும் வாகன சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பது, கள்ளழகர் எழுந்தருளுவதற்காக வைகையாற்றில் நீர் திறப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - குழந்தை பிறந்த நேரம் சரியில்லை - ஜோதிடரின் பேச்சால் 4 மாத குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற தாய் கைது