தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. திருப்பூர், விழுப்புரம் தூத்துக்குடி , தஞ்சாவூர் , சேலம் வேலூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் டைட்டல் பூங்கா உருவாக்கி இருப்பதை போல மதுரை மாநகராட்சியுடன் இணைந்து டைட்டல் பூங்கா மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 600 கோடியில் முதல் கட்டமாக 5 ஏக்கரில் இரண்டு கட்டிடங்கள் கட்டப்படும் எனவும், இரண்டாம் கட்டத்தில் மேலும் 5ஏக்கரில் இரட்டிப்பாக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மதுரையில் நடைபெற்ற "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற தெற்கு மண்டல மாநாட்டில் அறிவித்தார். இதன்மூலம் முதற்கட்டமாக 10ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் டைடல் பார்க் அமைய உள்ள மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மைதானத்தில் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் கலோன் மற்றும் வருவாய்த்துறை, நில அளவை, நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணி மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பூர்வாங்கப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும் டைடல் பார்க் அமைக்க தேவையான நிலம் உள்ளதா, அதில் சிக்கல் உள்ளதா என்பதும் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 15 நிமிடங்கள் அய்வு செய்த தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் காரில் புறப்பட்டு சென்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்