தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலைமேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.

 

புகைப்பட கண்காட்சியில் விஜய்சேதுபதி:

 

முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிலையில் வடிவேலு, பரோட்டா சூரி உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர். இந்நிலையில் இன்று நிறைவு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார்.

 

இந்நிலையில் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது வாழ்வு குறித்த புகைப்பட கண்காட்சியை நடிகர் விஜய் சேதுபதி இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், "புகைப்படங்கள், மிசா சிறைச்சாலை வடிவமைப்பு உள்ளிட்டவைகள் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நமது வரலாறு என்பது நம்மை யார் ஆண்டார்கள், யார் ஆள்கிறார்கள் என்பதில் இருக்கிறது. எனவே அவர்களை பற்றி கொள்ள வேண்டியது எல்லோருக்கும் அவசியம்.



முதலமைச்சர் மீது மரியாதை:


உலகத்திலேயே திமுகவில் தான் முதன்முதலாக இளைஞரணி துவங்கப்பட்டது என்ற விபரம், திமுக ஆட்சி காலத்தில் அதிகமான பாலங்கள் கட்டியது, பெரியார், அண்ணா போன்ற தலைவர்களுடன் அவர் இருந்த காட்சிகள் ஈர்க்கும் வகையில் இருந்தது. எனக்கு முதலமைச்சர் மேல் ஏற்கனவே மரியாதை உண்டு. இந்த கண்காட்சியை பார்த்த பின்னர், அவர் வாரிசு அரசியல் மூலம் தான் இந்த இடத்திற்கு வந்தார் என்ற கூற்று பொய் என தோன்றுகிறது. நான் அரசியலுக்கு வரும் போது இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து சொல்வேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை" என தெரிவித்தார்.




ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு,
"எங்கேயும், எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காக படைக்கப்பட்டு உள்ளது. அதில் வேற்றுமையை யார், எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது" என்றார்.


 


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Aishwarya Rajinikanth: 60 இல்லயாம்.. 200 சவரன் தங்கமாம்..! ரஜினிகாந்த் மகள் வீட்டு கொள்ளை வழக்கில் புதிய திருப்பம்..!









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண