தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக அவருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த நினைவுச் சின்னத்தை மெரினா கடற்கரை பகுதியில் கடலின் நடுவே அமைக்க முடிவு செய்துள்ளது.






பேனா நினைவுச்சின்னம்:


ரூபாய் 81 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள இந்த பேனா சிலைக்காக கடலில் நடுவே 8 ஆயிரத்து 551 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்பட உள்ளது. கடலின் நடுவே அமைக்கப்பட உள்ள இந்த பேனா சின்னத்திற்கு மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க அனுமதிக்கக்கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி தேவைப்படும் திட்டங்களை பற்றி விவாதிக்க 14 உறுப்பினர்களை கொண்ட நிபுணர் மதிப்பீடு குழு ஆலோசனைக் கூட்டமும் நடந்து முடிந்தது.




மத்திய சுற்றுச்சூழல் நிபுணர்கள் மதிப்பீடு குழு அறிக்கையின் பரிசீலனை அடிப்படையிலே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதால், அவர்களின் முடிவு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது. இருப்பினும், இந்த பேனா நினைவுச்சின்னத்திற்கு மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தி.மு.க., உடன் பிறப்புக்கள் பேனா சின்னத்தை தங்களின் இல்லங்களில் உதிக்க செய்து வருகின்றனர். மதுரையில் தி.மு.க., தொண்டர் நாகேந்திரன் என்பவர் தான் கட்டிய புதுமனையில் பிரமாண்ட 2 பேனா சின்னத்தை நிறுவியுள்ளார்.




இது குறித்து தி.மு.க., தொண்டர் நாகேந்திரன், “நான் 37 வருடமாக தி.மு.க.,வில் பயணிக்கிறேன். கலைஞரின் மேடைப் பேச்சால் ஈர்க்கப்பட்டு அவரின் ரசிகனாக மாறினேன். மேடையில் அவர்”உடன் பிறப்பே” என்று கூறும் போது நெஞ்சம் குளிரும், கைதட்டல் அதிரும் அப்படியாக அவரின் பேச்சுக்களை உள்வாங்கி செயல்பட்டேன். அவரின் புத்தகங்களை தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். தமிழ் மொழியின் மீது ஏற்பட்ட காதல், சமூக நீதி, திராவிடம் என பல விசயங்களை கற்றுக்கொண்டேன்.




இதனால் என் தலைவன் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக என்னுடை புது மனையில் பேனா சிலையை நிறுவியுள்ளேன். நாளை என்னுடைய புதிய இல்லத்தை எம்.எல்.ஏ., கோ.தளபதி, தொழிலதிபர் குருசாமி ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர். எனது இல்லத்தில் 30 ஆயிரம் செலவில் தலைவர் கலைஞர் பேனா சிலையை நிறுவியுள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பலரும் தங்களது இல்லத்தில் பேனா சிலையை நிறுவ என்னிடம் ஐடியா கேட்டுள்ளனர். ஒவ்வொரு தொண்டரின் வீட்டிலும் பேனா சிலை உதிக்கும். சுய விளம்பரத்திற்காக அரசியல் செய்யும் யாரும் கலைஞரின் புகழை மறைக்க முடியாது” என்றார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பெருநாள் தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒருவொருக்கொருவர் கைகொடுத்தும், ஆரத்தழுவியும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண