கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் பல்வேறு  நிகழ்வுகள் நடைபெறும். வழக்கமாக நடைபெறும் திருவிழாக்களை விட வினோதமாக நடைபெறும் திருவிழாக்களில் பங்கேற்பதும், குறிப்பாக கிராம புற பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்களில் பங்கேற்பதும் மிகவும் பிடித்தமாக இருக்கும். அதிலும் மலைகிராம புற பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் பழமை வாய்ந்ததாகவும் பல்வேறு வரலாற்று சிறப்புகளையும் பெற்றிருக்கும்.


வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக!




அப்படி மலைகிராமத்தில் நடைபெற்ற வினோதமான சேத்தாண்டி  திருவிழாவில் ஆயிரக்ககணக்கான ஆண்கள், வயது வேறுபாடு இன்றி கலந்து கொண்டு சேற்றை உடம்பில் பூசி கொண்டு கொண்டாடினர். சேற்றை உடம்பில் பூசி கொள்வதால் நோய் நொடி இன்றி விவசாயம் செழிப்பதாகவும் கிராம மக்களின் ஐயதீகம்.


திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானலில் கீழ்மலையான தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள பட்டாளம்மன் முத்தாலம்மன் கோவிலின் 22 ஆம் ஆண்டு திருவிழா இன்று தொடங்கியது. இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் இந்த திருவிழாவானது தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில்  முத‌ல் நாளான இன்று கரியாமல் சுவாமிக்கு சேத்தாண்டி வேடம் போடும் நிகழ்வு நடைபெற்றது.


Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!




இந்த நிகழ்வில் தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, பட்லாங்காடு, பண்ணைக்காடு, அசன் கொடை, காமனூர் உள்ளிட்ட மலைகிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் வயது வேறுபாடு இன்றி கலந்து கொண்டனர். இந்த கிராம திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் ஒன்று திரண்டு ஒருவர் மீது ஒருவர் சேற்றினை அடித்தும் சேத்தாண்டி வேடம்  இட்டும், வண்ண வண்ண கலர் பொடிகளை தூவி கொண்டும், உற்சாகமாக ஆடி பாடி ஊருக்குள் ஊர்வலமாக வந்து முத்தாலம்மனை வழிபடுகின்றனர். மேலும் சேற்றை உடலில் பூசி கொள்வதால்  தங்களுக்கு நோய் நொடிகள் ஏதும் வருவதில்லை எனவும்   ஊருக்குள் விவசாயம் செழிக்கும் என  இப்பகுதி கிராம மக்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த விழாவில் பெண்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்பது குறிப்பிடதக்கது.