உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேரமுறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். இதன் காரணமாக இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரே பல நாடுகளில் கொண்டாடப்பட்டது.

 

இந்நிலையில் மதுரை மாவட்ட காவல்துறை எல்லை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாடத்தின் போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 223 பேர் மீது வழக்குப்பதிவு 




 


மதுரை மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி, பெருங்குடி, உசிலம்பட்டி, சிலைமான், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில்  புத்தாண்டு கொண்டாடத்தின் போது போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 223 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.



புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது காவல்துறையினரின் எச்சரிக்கைகளை மீறியும்,  போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக பைக்குகளை ஓட்டி சென்றது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, தலைக்கவசம் அணியாதது, மூன்று பேர் பைக்கில் சென்றது போன்ற போக்குவரத்து விதிகளை மீறியதாக 223பேர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

இந்நிலையில் மதுரை மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவித விதிமீறல்களும் இல்லாத நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டவில்லை என மாநகர காவல்துறை அறிவித்துள்ளனர்.