காட்டு யானைகள் மற்றும் இதர வனவிலங்குகள் ரயில்வே தண்டவாளங்களில் ஏற்படும் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்பொது நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டல (Northeast Frontier Railway) ரயில்வே தடத்தில் யானையைக் காப்பாற்ற ரயிலை சரியான நேரத்தில் நிறுத்திய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி தனது ட்விட்டரில் பதிவிட்டார். சுயாதீனமாக சிந்தித்து ரயிலை இயக்கிய குமார், தாஸ் ஆகிய இரு ரயில் ஓட்டுனர்கள் பாரட்டப்பட வேண்டியவர்கள். இந்த உலகை ஒரு அருமையான இடமாக்குகின்றனர் என்றும் பதிவிட்டார்.
நெட்டிசங்களின் கருத்து:
யானைகள் மற்றும் பிற விலங்குகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாய் உள்ளது. உடனடிப் பலன் தரக் கூடிய, நடைமுறை சாத்தியமான, குறைந்த செலவிலான நடைமுறைகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்வது முக்கியமானதாக கருதப்படுகிறது.