மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும்  ஜல்ஜீவன் திட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமபுற வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பை வழங்க வேண்டும் என்ற இலக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த 3,691 கோடி வரை தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கள்ளப்பள்ளி பஞ்சாயத்தில், பொதுமக்களின் வீட்டிற்கு ஏற்கனவே 1,800 குடிநீர் இணைப்புகள் இருந்து வருகிறது. இந்நிலையில் பாரத பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலமாக அனைவருக்கும் குடிநீர் இணைப்பு சீராக செல்லும் விதமாக புதிதாக குடிநீர் இணைப்புகள் அடைப்பான் (குண்டு) வைத்து குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. 2021-22 ஆம் ஆண்டு கள்ளப்பள்ளி பஞ்சாயத்தில் சுமார் 1,000 இணைப்புகள் புதிதாக இந்த ஜல் ஜீவன் திட்டத்தில் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.




ஏற்கனவே பஞ்சாயத்து மூலமாக குடிநீர் இணைப்பு பெற்றவர்கள்  1500 மற்றும் 2000 ரூபாய் டெபாசிட் கட்டி இணைப்பு பெற்று, மாதம் 60 வீதம் வருடத்திற்கு 720 ரூபாய் குடிநீருக்கு கட்டணம் கட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஜல் ஜீவன் திட்டம் மூலமாக குடிநீர் குண்டு அடைப்பான் வைத்த பைப்புகள் அனைவருக்கும் புதிதாக போடப்பட்டு வருகிறது. இதற்கு யாரையும் வற்புறுத்தி பணம் வசூலிக்க கூடாது. அப்படி பொதுமக்களின் பங்களிப்பு பணம் என்றால் 1,100 ரூபாய் மட்டும் பணம் வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். தற்போது இந்த கொரோனா காலத்தால் யாரையும் வற்புறுத்தி பணம் வசூலிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.




ஆனால், இந்த கள்ளப்பள்ளி பஞ்சாயத்தில் புதிதாக இந்த குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு பஞ்சாயத்து கிளர்க் லெட்சுமணன், மற்றும் பஞ்சாயத்து தலைவர் சக்திவேல் கண்டிப்பாக 6 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என பொதுமக்களிடம் வற்புறுத்தி வருகின்றனர். அதிகப்பணம் நேரில் கையூட்டு பெற்றாள் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் நேரடியாக கள்ளப்பள்ளி பஞ்சாயத்து என்று அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2 கணக்குகள் மூலமாக பணம் கட்டப்பட்டு அந்த ரசீதியைக் கொண்டு வந்து பஞ்சாயத்தில் காண்பித்து ரசீது பெற்று செல்ல வேண்டும் என தெரிவிக்கின்றனர். ஜெஜெ இணைப்பு திட்டத்திற்கு 1200 ரூபாயும் புதிய குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை 4800 ரூபாயும் என இரண்டு கணக்குகளில் தனித்தனியாக பணம் கட்டிவிட்டு பஞ்சாயத்தில் கொடுத்து ரசீது பெற்று சென்ற பிறகுதான் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.




இது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி எதற்காக இந்த பணம் வசூலிக்கிறார்கள் என்று பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டபோது பணம் கட்டியே ஆக வேண்டும். இந்த திட்டத்திற்கு பணம் கட்டினால் குடிநீர் இணைப்பு வழங்க முடியும் என கண்டிப்பாக தெரிவித்துள்ளனர். அதன்படி 500க்கும்  மேற்பட்டவர்கள் 6 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டி குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். இதில் பெரியசாமி (இந்தியன் ஆர்மி) மத்திய ரிசர்வ் போலீசில் உள்ள ஒரு நபர் சொந்த ஊர் இந்த பகுதியை சேர்ந்தவர். அவரது வீட்டிற்கு இணைப்பு பெறுவதற்கு கேட்டபோது பணம் கட்டிய ஆக வேண்டுமென தெரிவித்துள்ளார்.




உடனடியாக அந்த நபர் பெரியசாமி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரை மாவட்ட நிர்வாகம் கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஒ) அனுப்பி வைத்து அவர் மூலமாக விசாரணை செய்ய உத்திரவில், இதை தெரிந்து கொண்ட பஞ்சாயத்து கிளார்க் லட்சுமணன், புகார் அளித்த மத்திய ரிசர்வ் போலீசிடம் நேரடியாக தொடர்பு கொண்டு அவரை சமாதானம் செய்யவும் மேலும், இந்த புகார் உண்மைக்கு புறம்பாக உள்ளது. நாங்கள் அப்படி வசூலிக்கவில்லை இது இந்த தொகை கட்ட வேண்டும் என்பதே எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. என அவரிடம் பேசியுள்ளார். அந்த ஆடியோவும் தற்போது கரூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. இந்தப் புகாரை அடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆட்சித்தலைவர் நேரடியாக அதிகாரிகளை அனுப்பி விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.