Weather Forecast Today: " காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலட் கொடுக்கப்பட்டுள்ளது"

Continues below advertisement

தமிழ்நாட்டில் பருவமழை

பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இந்தப் பருவ மழையில் வங்கக்கடை உருவாகியுள்ள, மோந்தா புயல், தீவிரப்பு புயலாக வலுப்பெற்று வருகிறது. தீவிரப்புயலாக வலுப்பெற்ற பிறகு ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே, இந்தப் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் மழை முன்னெச்சரிக்கை என்ன ?

இந்த பருவம் மழையில் இதுவரை 18 மாவட்டங்களில் இயல்பை விட, அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட 57% வரை அதிகமாக மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

திருவள்ளூர் மாவட்டம் மழை நிலவரம் - Thiruvallur Weather Forecast Today 

திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை மோந்தா புயல் கரையைக் கடக்க இருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலேட் கொடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை கொரட்டூர் மற்றும் திருத்தணியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று பரவலான மிக கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்ட மழை நிலவரம் Kanchipuram Weather Forecast Today 

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை இன்று மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை நேற்று மாலை முரளி விட்டு விட்டு பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. 

செங்கல்பட்டு மாவட்டம் வானிலை முன்னறிவிப்பு - Chengalpattu Weather Forecast Today

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

ராணிப்பேட்டை மழை முன்னறிவிப்பு Ranipet Weather Forecast Today 

ராணிப்பேட்டை மாவட்டத்தை பொருத்தவரை இன்று புயல் எதிரொலியாக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் பகுதியில் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வரை சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் தமிழ்நாடு, ஆந்தரா மற்றும் ஒடிசா கடற்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.