மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, தேர்வு எழுதிய 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகளில் பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக அரசு பள்ளிகள் சதவிகிதமும், தனியார் பள்ளிகள் சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் பதிவான 94.56 தேர்ச்சி சதவிகிதத்தை காட்டிலும், நடப்பாண்டில் 0.49 சதவிகிதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதமும் பலரையும் கவனத்தை ஈர்த்துள்ளது.
எந்த மாவட்டம் முதலிடம்?
மாநிலத்திலேயே அதிகபட்சமாக அரியலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் 98.82 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் 97.98 சதவிகிதமும், திருப்பூர் மாவட்டத்தில் 97.53 சதவிகிதமும், கோயம்பத்தூர் மாவட்டத்தில் 97.48 சதவிகிதமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 97.01 சதவிகிதமும் தேர்ச்சி பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலை என்ன ?
காஞ்சிபுரம் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 107 பள்ளிகளை சேர்ந்த 13754 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்றனர்.
இதில் 93.27 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது கடந்த ஆண்டு காட்டிலும் 0.99 சதவீதம் அதிகம். கடந்த வருடம் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 33 வது இடத்திலிருந்து தற்போது 31 வது இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம் முன்னேறியுள்ளது.
25 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை 2 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
தொடரும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோகம்
காஞ்சிபுரம் மாவட்டம் அதிகளவு தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாகும் வேலை வாய்ப்புகள் நிறைந்த மாவட்டமாகவும் இருக்கின்றது. அதிகளவு வேலை வாய்ப்பு நிறைந்த மாவட்டமாக காஞ்சிபுரம் இருந்து வந்தாலும் படிப்பில் பின்தங்கிய மாவட்டமாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. பிற மாவட்டங்களை காட்டிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் மிக குறைந்த அளவில் இருந்து வருகிறது.