பொங்கல் திருநாளன்று ( thai pongal )


 

காஞ்சிபுரம்  ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிருப்பூர் கிராமத்தில் வசித்து வரும் செந்தில்குமார் மற்றும் குடும்பத்தினர் பிரதானமான தொழிலாக விவசாயம் செய்து வரும் நிலையில், இவர் காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார். விவசாயி என்பதால் விவசாயிகளின் உண்னதத்தை போற்றும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று விவசாயிகள் உற்பத்தி பொருளாக விளங்கும் செங்கரும்பின் மூலம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்துவார். அவ்வகையில் கடந்தாண்டு வரை செங்கரும்பில் ஆன பொங்கல் பானை , ஜல்லிக்கட்டு காளைகள் , பாரதப் பிரதமர் மோடி உருவம் என பலவகையில் ஆண்டுதோறும் அமைத்து செயல்படுத்தி வந்தார்.



செங்கரும்பினால் ஆன குடிசை வீடு 


 

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய பொருட்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் விழிப்புணர்வுக்காக சுமார் 3 டன் செங்கரும்பினால் ஆன குடிசை வீடு அமைத்து அதில் பழங்கால பாரம்பரிய பொருட்களான சமையல் உபகரணங்கள், அளவைகள் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.



 

கடந்த ஒரு வார காலமாகவே இதற்கான முயற்சியில் ஈடுபட்டு நேற்று இதனை நிறைவு செய்து,  தனது குடும்பத்துடன் செங்கரும்பு குடில் முன்பு கிராமிய முறைப்படி இன்று பொங்கல் தினத்தன்று பார்வைக்காக வைக்கப்பட்டள்ளது.



பாரம்பரியமாக வாழ்ந்த பழமையான வீடு நினைவு


 

உழவர்களின் உற்பத்தி பொருளை மேம்படுத்தவும், முன்னோர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பழமையான வீட்டை நினைவு கூறும் வகையில்  தத்ரூபமாக குடில் அமைத்து மட்டுமல்லாமல் பிரதமரின் திட்டங்களில் ஒன்றான அனைவருக்கும் வீடு என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.



இந்த செங்கரும்பு குடில் பார்க்க அழகான தோற்றத்திலும் பார்ப்பவரை ஒரு நிமிடம் மெய் மறக்க செய்யும் வகையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றில் இருந்து 10 நாட்கள் அப்பகுதி மக்கள் நேரில் பார்வையிட பர்வையகாக வைக்கப்பட்டுள்ளது.

 

தைப்பொங்கல் வைக்கச் சிறந்த நேரம்:



தைப் பொங்கல் கொண்டாடப்படும் வரும் திங்கள்கிழமை (15ம் தேதி) காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலமும், காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை எமகண்டமும் வருகிறது. இந்த நேரம் தவிர்த்து அன்றைய தினத்தில் எப்போது வேண்டுமானாலும் பொங்கல் வைக்கலாம்.




சூரிய உதயத்தின்போது பொங்கல் வைத்தால் சிறப்பு என்று சொல்வது உண்டு. தைப் பொங்கலன்று காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரையும், காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரையும் பொங்கல் வைக்க மிகச்சிறந்த நேரம் ஆகும். பொங்கல் வைத்து வழிபடுவதற்கு இந்த நேரம் மிகச்சிறந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில், பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பானை பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்ற கோஷத்துடன் மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் வைப்பார்கள்.


மாட்டுப் பொங்கல் வைக்க சிறந்த நேரம்:


உழவுக்கு உற்ற நண்பனாக விளங்கும் மாட்டைப் போற்றும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. வரும் 16ம் தேதியன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மாட்டுப் பொங்கல் கொண்டாட உகந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில் வீட்டில் வளர்க்கும் மாடுகளை அலங்கரித்து குங்குமம், சந்தனம் வைத்து அதை அலங்கரித்து வழிபடுவார்கள்.


தமிழ்நாட்டின் முதன்மை பண்டிகையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையன்று மக்கள் வீடுகளின் வாயிலில் கரும்புகளும், தோரணங்களும் கட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம் ஆகும். தைப்பொங்கலின்போது வீட்டின் பூஜையறையில் சாமி படங்களுக்கு மாலையிட்டு, அதன்முன்பு வாழை இலையிட்டு அதில் பொங்கல் வைத்து வாழைப்பழம், வெற்றிலை பாக்கு ஆகியவை வைத்து வணங்க வேண்டும். அன்றைய தினம் மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுவதும் வழக்கம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.