மீன் தொட்டியில் வளர்க்கப்படும் வண்ண மீன்கள் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்து காவல்துறை அதிகாரியின் மகன் நண்பருடன் சென்று அடிதடியில் ஈடுபட்டுள்ளார்.  பெண் உரிமையாளர் மீது கொலவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். திடீரென பொதுமக்கள் ஒன்று கூடியதால் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை அறுத்துவிட்டு பெண் அறுத்துவிட்டதால் அடித்தேன் எனக்கூறி நாடகம். காவலரின் மகன் என்பதால் முறையாக விசாரணையும் வழக்கு பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு  


வண்ண  மீன்கள்


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மிலிட்டரி ரோடு பகுதியில் பிரபல தனியார் பள்ளி அருகே ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த சோசமா வர்கீஸ் (42) என்ற பெண் கடந்த ஒருமதமாக மீன் தொட்டிகளில் வளர்க்கப்படும் வண்ண மீன்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இங்கு வண்ண  மீன்கள் மட்டுமல்லாமல் லவ் பேர்ட்ஸ், கிளிகள் போன்றவைகளை விற்பனை செய்து வருகின்றனர். 


மீன் தொட்டி


இந்நிலையில்  இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் வண்ண மீன்கள் வாங்குவதுபோல உள்ளே கடைக்குள் நுழைந்து மீன் தொட்டியில் உள்ள மீன்களை வளை போட்டு எடுக்காமல் நேரடியாக கையிலேயே எடுத்து உள்ளனர். அப்பொழுது கடையில் இருந்த உரிமையாளர் சோசமா மீன் தொட்டியில் உள்ள மீனை கையில் எடுத்தால் இறந்து விடும் வலையில் போட்டு எடுக்கவும் என கூறியுள்ளார்.


கொலை வெறி தாக்குதல்


அப்பொழுது அந்த நபர்கள் அந்த மீன் எப்படி இருக்குது என்று பார்க்கலாம் என கையிலே எடுத்துள்ளார், அதனை கண்டித்த பெண்ணை மர்ம நபர்கள் மூவரும் சரமாரியாக முகப்பகுதியில் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண் அலறல் சத்தம் கேட்டு அருகே உள்ள கடை மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடியதும். அந்த மர்ம நபர் கழுத்தில் போட்டிருந்த தங்கச்சங்கிலியை தானாகவே அறுத்துக்கொண்டு இந்தப் பெண் என் சங்கிலியை அறுத்ததாக பொய்யாக கூட்டு சாலையில் உள்ள காவலரிடம் கூறி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.  


108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை


தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதி மக்கள் கொலவெறி தாக்குதல் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை செல்போன் மூலமாக எடுத்து வைத்து விசாரித்த போது மர்ம நபர்களில் ஒருவரின் பெற்றோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வருவதாக கூறினர். 


இந்நிலையில் மர்ம நபர்களை காவல்துறையின் பிள்ளைகளாக இருப்பதால் காவலர்கள் முறையாக விசாரணை நடத்தாமல் வழக்கப்பதிவு செய்யப்படாமல் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு. பட்டப் பகலில் காவல்துறையைச் சேர்ந்த மகன் ஒருவர் கடைக்குள் இருந்த பெண்ணை கொலை வெறி தாக்கி விட்டு தப்பி ஓடிய செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.