காஞ்சிபுரத்தில் அதிநவீன தொழிற்நுட்ப கேமிரா மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்கு பதிவு முறை இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது
தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன்
தமிழ்நாடு அரசு தொடர்ந்து அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை குறைக்கவும் சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து குற்றங்களை வழக்கு பதிவு செய்து அதனால் ஏற்படும் விபத்துக்களை குறைக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் அதிநவின தொழிற்நுட்ப கருவிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.
அதிநவீன தொழில்நுட்ப கேமராக்கள்
அதன் முதற்கட்ட நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாகறல் மற்றும் உத்திரமேரூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் - உத்திரமேருர் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து வழக்கு பதிவு செய்யும் அதிநவீன தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. ( ITMS Intelligent Traffic Management System) என்ற தொழில்நுட்பம் மூலம் விதிமீறல் வழக்கு பதியப்பட்டு வாகனத்தின் பதிவெண் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மூலமாக அதன் உரிமையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது.
7 நாட்களுக்குள்
மேலும் அவசர பணியாக செல்லும் ஆம்புலண்ஸ், காவல்துறை, பாதுகாப்புதுறை, அரசு துறை வாகனங்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதுடன் அவசர மருத்துவ தேவைக்காக சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக செல்லும் பொதுமக்களின் வாகனங்களுக்கும் இதில் விலக்கு அளிக்கப்படுகிறது. அவ்வாறு மருத்துவ தேவைக்காக வேகமாக செல்லும் போது குறுஞ்செய்தி வரப்பெரின் அவற்றை உரிய ஆவணங்களுடன் 7 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாகறல் மற்றும் உத்திரமேருர் காவல்நிலையங்களில் சமர்பித்தால் மட்டுமே தங்கள் வாகனத்தின் மீது போடப்பட்ட வழக்கினை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
அபராத தொகை எவ்வளவு ?
ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் - ஆயிரம் ரூபாய் அபராதம்
ஒரே வாகனத்தில் மூன்று நபர்கள் சென்றால் - ஆயிரம் ரூபாய் அபராதம்
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் -- 5000 அபராதம்
அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு -- ஆயிரம் ரூபாய் அபராதம்
இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு டூவீலருக்கு 2000 ரூபாயும் ஃபோர் வீலருக்கு 4 ஆயிரம் ரூபாய் ஆபரணம் விதைக்கப்படும்