நகரங்களில் சிறந்த நகரமாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் நகரத்திற்கு என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. காஞ்சிபுரம் கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் ஒரு காலகட்டத்தில் பௌத்தம், சமணம், வைணவம் மற்றும் சைவம் உள்ளிட்ட பல்வேறு சமயங்கள் கொடி கட்டி பறந்தன. அதேபோன்று காஞ்சிபுரம் பட்டு இருக்கும் புகழ் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. 

Continues below advertisement

தூய்மையான காஞ்சிபுரம் பட்டு 

இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பட்டுச்சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிலும் பல்வேறு நகரங்களில் பட்டுச்சேலை உற்பத்தி செய்யப்பட்டாலும், காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டுப் புடவைக்கு தனி இருந்து வருகிறது. ஒரு சில குறிப்புகளின் அடிப்படையில், சோழர்கள் காலத்திலிருந்து காஞ்சிபுரம் நகரம் பட்டுப்புடவை தயாரிப்பதில் சிறந்து விளங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 400 ஆண்டுகளாக, காஞ்சிபுரம் பட்டு புடவை தயாரிப்பதில் முன்னணி நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்திற்கு பட்டுப்புடவை தூய மல்பரி பட்டு நூலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதேபோன்று, காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் பயன்படுத்தப்படும், தங்கம் மற்றும் வெள்ளி கலந்த சரிகை காஞ்சிபுரம் பட்டு புடவைகளுக்கு தனித்த அடையாளத்தை கொடுக்கிறது.

Continues below advertisement

பல கோடி ரூபாய் வணிகம்

காஞ்சிபுரம் பட்டு புடவைக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல், தென்னிந்தியா மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் பட்டுப்புடவை எடுப்பதற்காக பல்வேறு ஊர்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து காஞ்சிபுரத் நகரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் பட்டு புடவையின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் மூன்றாவது இடம் பிடித்த காஞ்சிபுரம்

இந்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்திய பட்டு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ISEPC) தகவலின் அடிப்படையில் இந்திய அளவில், பட்டுப்புடவை உற்பத்தி வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் முதலிடத்தை பிடித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வாரணாசி இரண்டாவது இடத்தையும், தமிழ்நாட்டை சேர்ந்த காஞ்சிபுரம் மூன்றாவது இடத்தையும், கர்நாடகாவை சேர்ந்த மைசூர் நான்காவது இடத்தையும், பீகார் மாநிலத்தை சேர்ந்த பாகல்பூர் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

காஞ்சிபுரத்திற்கு தனிச்சிறப்பு 

ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம் உலக அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் தொடர்ந்து, தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த அசத்தி வருகிறது. அந்த வகையில் பட்டுக்கோட்டை உற்பத்தியிலும் இந்திய அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாமிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.