காஞ்சிபுரத்தில் ஓரிக்கை துணை மின் நிலையம் மற்றும் பழையசீவரம் துணை மின் நிலையம் ஆகிய பகுதிகளில் நாளை 19.07.2025 (சனிக்கிழமை) மாதாந்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரிக்கை துணை மின் நிலையம் 

காஞ்சிபுரம் ஓரிக்கை 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 19.07.2025 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, இரயில்வேரோடு, ஹாஸ்பிட்டல்ரோடு, காந்தி ரோடு, பி.எஸ்.கே தெரு, எண்ணெய்காரத் தெரு, சங்குசாபேட்டை, சேக்குபேட்டை கவரை தெரு, நடுத்தெரு சாலியர் தெரு‌ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. 

திருக்காலிமேடு, மாமல்லன் நகர், மின் நகர், வைகுண்டபெருமாள் கோயில் சன்னதிதெரு மற்றும் எக்ஸ்டென்ஷன், கிழக்குராஜ வீதி, சப்பானிபிள்ளையார் கோயில் தெரு, செங்கழுநீரோடை வீதி, டோல்கேட், சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், சதாவரம், களக்காட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. 

முத்தியால்பேட்டை, ஐயம்பேட்டை, பெருமாள் கோவில் மாட வீதிகள் தேனம்பாக்கம், விஷ்ணு நகர், ஆதிசங்கரர் நகர் திருச்சோலை வீதி, அம்மன்காரதெரு, மலையாளதெரு ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம்

19.07.2025 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மின் தடை ஏற்படும். 

காஞ்சிபுரம் பழையசீவரம் துணை மின்நிலையம்:

ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன்பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம், தாங்கி, களியனுார், வில்லிவலம், கருக்குப்பேட்டை, அங்கம்பாக்கம், அவளூர், தம்மனுார், கம்பராஜபுரம், கட்டவாக்கம், வாரணவாசி‌ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், வாலாஜாபாத், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், வெண்குடி, திம்மராஜாம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தென்னேரி, தென்னேரி அகரம், மச்சமேடு, ஊத்துக்காடு, தொள்ளாழி, தேவரியம்பாக்கம், நத்தாநல்லுார், சங்கராபுரம், புளியம்பாக்கம், சிறுபாகல், பூதேவி, பினாயூர், சீத்தனஞ்சேரி. சாத்தனஞ்சேரி, கரும்பாக்கம், காவடிபாக்கம், சிறுமயிலுார், திருமுக்கூடல், ஆனம்பாக்கம், பட்டா, சிறுதாமூர், நெற்குன்றம், நீர்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

மின்தடை மேற்கொள்ளப்பட நேரம்

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்பட உள்ளது.