தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு சார்பில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு, ஒருமுறை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது.
ஓரிக்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிப்பு.
காஞ்சிபுரம் ஓரிக்கை 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 18.01.2025 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, திருக்காலிமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
சேக்குப்பேட்டை வடக்கு, தெற்கு மற்றும் நடுத்தெரு, எண்ணைக்கார தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்திரோடு, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
18.01.2025 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், காஞ்சிபுரம்/வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.