பயங்கரவாத முகாம்கள் மற்றும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பஞ்சாபின் எல்லை மாவட்டமான அமிர்தசரஸில் பாக் அனுப்பிய ஏவுகணை தகர்ப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆப்ரேஷன் சிந்தூர்:
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகள் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத முகாம்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் நடத்தியது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் வெடிச்சத்தங்களைக் கேட்டு வானத்தில் விளக்குகள் மின்னுவதைக் கண்டதும் மக்கள் பீதியடைந்தனர். அதைத் தொடர்ந்து நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காலையில் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஜேதுவால் மற்றும் பாந்தெர் ஆகிய இடங்களில் உள்ள வயல்களில் இருந்து ஏவுகணை போன்ற சிதைவுகள் மீட்கப்பட்டன. இந்த ராக்கெட்டுகள் துதலா, ஜேதுவால் மற்றும் பந்தேர் கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு அமிர்தசரஸிலும் மின்தடை விதிக்கப்பட்டது. மறுபுறம், பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நடுவானில் தகர்ப்பட்ட பாக்.ஏவுகணை
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, பஞ்சாபின் அமிர்தசரஸில் ராக்கெட்டுகள் விழுந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டுகள் அமிர்தசரஸில் உள்ள 3 கிராமங்களில் விழுந்தன. இதை அமிர்தசரஸ் கிராமப்புற எஸ்எஸ்பி மணீந்தர் சிங் உறுதிப்படுத்தி, இது குறித்து உடனடியாக ராணுவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். இதன் பின்னர், இராணுவம் அந்த இடத்தை அடைந்து இந்த ராக்கெட்டுகளை அவர்களுடன் எடுத்துச் சென்றது.
விமானப்படையுடன் தொடர்புடைய இரண்டு பாதுகாப்பு நிபுணர்கள், இவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளின் படைகளாலும் பயன்படுத்தப்படுவதாகக் கூறினர். இவற்றின் மூலம் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இந்தியாவின் ராக்கெட் அவற்றை வானத்திலேயே வெடிக்க வைத்ததன.. இதன் காரணமாக இந்த ராக்கெட்டுகள் வெடிக்க முடியவில்லை. இந்த நிலையில் ஏவுகணை தகர்த்து ஏறியப்பட்டதாக கூறப்படும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது
விடுமுறை இல்லை:
பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் சிறப்பு சூழ்நிலைகளில் மட்டுமே விடுப்பு வழங்கப்படும். இது தொடர்பாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.