"காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது"

Continues below advertisement


தமிழ்நாட்டில் மின்தடை


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு சார்பில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது. துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் காலகட்டத்தில், காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் நிறுத்தும் மேற்கொள்வது வழக்கமாக இருக்கிறது. 


சில சமயங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கும் நேரம் மாறுபடும். மின்சார துறை சார்பில் மின் நிறுத்தும் மேற்கொள்வதற்கு முன்பு அது குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்படும். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (11-11-2025) மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள இடங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.


காஞ்சிபுரம் மற்றும் வேளியூர் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் 


காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை காஞ்சிபுரம் மற்றும் வேளியூர் துணை மின் நிலையங்களில் நாளை (11-11-2025) பராமரிப்பு பணிகள் மற்றும் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் வகையில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


எந்தெந்த பகுதியில் நாளை மின்தடை மேற்கொள்ளப்படும்


காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட, காஞ்சிபுரம் பாலியார் மேடு, வெள்ளி கேட், காரப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக் நகர், ஏனாத்தூர், வையாவூர், இந்திரா நகர், வேளியூர், புதுப்பாக்கம், நல்லூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம் 


மேலே குறிப்பிட்டு பட்டுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.