காஞ்சிபுரம் 110/33. 11 கே.வி துணை மின் நிலையத்தில் வரும் 10.12.2024 செவ்வாய்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை பராமரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரத்தின் சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வரும் 10.12.2024 செவ்வாய்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளான பாலியர்மேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம் கீழம்பி, திம்மசமுத்திரம் அசோக்நகர், ஏனாத்தூர், வையாவூர், இந்திராநகர் மற்றும் 33/11 கே.வி வேளியூர் மற்றும் 33/11 கே.வி வையாவூர் துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் 10.12.2024 செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் / வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.