சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "திருமாவளவன் மேடையில் இல்லை, ஆனால் அவரது மனசாட்சி இங்கு தான் இருக்கிறது. பாஜகவை தமிழ்நாட்டில் ஒழித்துவிட்டோம். 2026ல் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி பிறப்பால் முதலமைச்சர் உருவாகக் கூடாது. தமிழ்நாட்டில் ஒரு பொதுத்தொகுதியில் இன்று வரை ஒரு தலித் வேட்பாளரை நிறுத்த முடியவில்லை, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஏன் சொல்லக் கூடாது?. விஜய் வேங்கைவயலுக்கு செல்ல வேண்டும். நீங்க களத்துக்கு வாங்க” எனப் பேசினார்.


விஜய் பரபரப்பு பேச்சு 


தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விஜய், “தேர்தல் நேர்மையாக, வெளிப்படையாக நடக்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தால் நியமிக்கப்பட வேண்டும். சம்பிரதாயத்திற்காக மழை தண்ணீரில் நின்று போட்டோ எடுக்கும் அரசியல்வாதி நான் அல்ல. மக்களோடு என்றும் நான் இருப்பேன். விடுதலை சிறுத்தை தலைவரான திருமாவளன், அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிலேயே கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சியின் அழுத்தம் இருந்தாலும். அவரது மனம் முழுவதும் இங்கதான் இருக்கும். திருமாவிற்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை என்னால் முழுமையாக உணர முடிகிறது” என பேசினார்.


திமுக ரியாக்ஷன் என்ன ?


முதலில் நடிகர் விஜய் தேர்தல் நின்று ஒரு கவுன்சிலர் ஆகட்டும் பிறகு கருத்து சொல்லலாம். பெரும் வெள்ளத்தில் மக்களை சந்திக்காத விஜய் நலத்திட்ட உதவிகளையே work from home போல கொடுப்பவர் என்ன தகுதி உள்ளது என திமுக மாணவரணி அணி செயலாளர் சி.வி. எம்.பி எழிலரசன் கருத்து தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திமுக மாணவர் அணி செயலாளருமான சி.பி.எம்.பி எழிலரசன் கூறுகையில்,  “படத்தில் பெரிய ஹீரோவாக நடித்துவிட்டு, மக்களை சந்தித்தால் வாக்கு வாங்கி விடலாம் என்ற எண்ணம் என்பது கிடையாது. கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பலமான கொள்கை கூட்டணி தொடர்ந்து வருவதால் கூட்டணியை பார்த்து உடைந்து விட வேண்டுமென சிலர் நினைக்கிறார்கள். அதனால்தான் வயித்தெரிச்சலில் விஜய் பேசுகிறார்.


வயிற்று எரிச்சல்


நடிகர் விஜய் விசிக தலைவர் தொல் திருமாவளவன் அழைத்து வராததால் வயிற்று எரிச்சலில் இப்படி பேசுகிறார். மன்னராட்சி என்றெல்லாம் என்பது கிடையாது, இங்கே யாரும் முடி சூடவில்லை இது அரசியலைப் பற்றி தெரியாத ஒரு நபர் பேச்சு போல் உள்ளது. இது குடியாட்சி மக்களை நேரடியாக சந்தித்து மக்களிடம் வாக்கு பெற்று சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


முதலில் கவுன்சிலர் ஆகட்டும்


விஜய் முதலில் தேர்தலில் நின்று ஒரு கவுன்சிலராகவாவது ஆகட்டும். உதயநிதி தலைவரைப் பற்றி பேசினால் பிரபலமாகிவிடலாம் என்பதற்காக பேசி வருகிறார். மழையில் முதலமைச்சர் அனைவரையும் வீட்டில் இருந்து பணியாற்றும்படி (work from home) சொன்னார் ஆனால் நடிகர் விஜய் மக்களையே வீட்டில் இருந்து தான் சந்திக்கிறார், நலத்திட்டத்தை கூட work from Home போல தான் கொடுக்கிறார், அவ்ளோ பெரிய வெள்ளத்தில் மக்களை சந்திக்காத நபர் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் தெரிவித்துள்ளார்.