தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த மின்சாரம் ரயில் மீது ஏறி மனநல பாதிக்கப்பட்டவரை, கீழே இறங்க மறுத்ததால் ஒரு மணி நேரம் ரயில் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்.


மின்சார ரயில் மேலே ஏறிய ஒருவர் 


காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையத்தில் தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் வருகை தந்த 40803; மின்சார ரயிலில் நேற்று மாலை 5.50 ரயில் நிலையத்தில் நின்றது. தண்டவாளத்தில் நின்ற மின்சார ரயில் மீது ஒருவர் மேலே ஏறி படுத்துக்கொண்டதை ரயில்வே ஊழியர்கள் பார்க்காததால், அவ்வழியாக சென்ற ரயில் பயணி ஒருவர் மேலே ஒருவர் இருப்பதாக கூறி ரயில் நிலைய அதிகாரிகளும் தகவல் அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து மேலே ஏறிய நபரை கீழே இறங்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேல ஏறி நபரை இறங்கும்படி ஒரு மணி நேரத்துக்கு மேலாக இறங்க சொல்லியும், அந்த நபர் இறங்கவில்லை.


மின்சார ரயில் என்பதால், ரயில் மேலே உயர் மின்சாரம் கம்பிகளில் சென்று கொண்டிருந்த நிலையில், மர்ம நபர் மேலே நிற்காமல் படுத்துக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். ஒரு மணி நேரத்துக்கு பிறகு ரயில்வே போலீசார் அந்த நபரை  மீட்க ரயில் மீது ஏற முயன்ற போது, அந்த நபர் கீழே இறங்குவதாக கூறிய பின் அவரை பத்திரமாக தரையில் இறக்கி மீட்டனர். 


தெலுங்கு மொழியில் பேசுவதால்


அந்த நம்பரை காஞ்சிபுரம் தாலுகா போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,  தெலுங்கு மொழியில் பேசுவதால் ஆந்திர மாநிலத்தை சார்ந்தவர் என்று தெரியவந்ததில் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநல பாதிக்கப்பட்டவர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ரயிலின் மீது ஏறி இறங்க மறுப்பதால், ரயில் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அடுத்து வந்த சில ரயில்களும், சில நிமிடங்கள் தாமதமாக சென்றன


மேலும் சம்பந்தப்பட்ட நபர் குறித்த தகவல்களை, ஆந்திர மாநில காவல்துறைக்கு அனுப்பி வைக்கவும் ,  முடிவு செய்துள்ளனர். இந்த நபர் காணாமல் போனது குறித்து ஏதாவது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள் என போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். மனநல பாதிக்கப்பட்ட நபர் என தெரிய வந்ததால் ரயில்வே போலீஸ் சார்பில், சம்பந்தப்பட்ட நபர் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.


ஒரு மணி நேரத்திற்கு மேலாக


மனநல பாதிக்கப்பட்ட நபர் ரயில் மீது ஏறி, அட்டகாசம் செய்ததால் ரயில் சேவை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில் தாமதமாக புறப்பட்டு அங்கிருந்து சென்றது. ரயில் நிலையத்தில் மனநல பாதிக்கப்பட்ட நபர் செய்த, சம்பவத்தை அங்கிருந்த பயணிகள் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆபத்தான இடத்தில் நின்று இருந்த, மனநல பாதிக்கப்பட்ட நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபியிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது