ஒரு கலெக்டர்அதிகாரியை மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்க முடியாது, படித்து ஐஏஎஸ் ஆனால் மட்டுமே கலெக்டர் ஆக முடியும், ஆனால் ஊராட்சி மன்ற தலைவரை பாகுபாடு இன்றி விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்ய வேண்டுமென என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை வழங்கினார்.


வன்கொடுமை தடுப்பு சட்டம்


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுதெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.


ஜாதி வேறுபாடு இருக்கிறது


தலைவர்களுக்கான பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. பதவிக்காலம் முடிந்துவிட்டது என்று கருதாமல் ஒவ்வொரு குடிமகனும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. எனவே வன்கொடுமை, ஜாதி வேறுபாடு கிராமப்புறங்களில் அதிகளவு காணப்படுகிறது. அதனை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து சமூக நீதியினை வளர்க்க வேண்டும்.


தொடர்ந்து கிராம பொதுமக்கள் உங்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம், பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள், ஆதிதிராவிடர் நலத்திட்டங்கள், தாட்கோ திட்டங்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வழங்கினர். 


சமூகம் மாறிவிட்டது என்று கூறினாலும்


தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ஒரு கலெக்ட்ர் அதிகாரியை மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்க முடியாது, படித்து ஐஏஎஸ் ஆனால் மட்டுமே கலெக்டர் ஆக முடியும், ஆனால் ஊராட்சி மன்ற தலைவரை பாகுபாடு இன்றி விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அனைத்து மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்ய வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை வழங்கினார். சமூகம் மாறிவிட்டது என்று கூறினாலும், இன்றளவும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தொடர்வதாக காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வேதனை தெரிவித்துள்ளார். 


இந்நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர்.