காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தேசிய தொல்குடி (பழங்குடி) மக்களுக்கான சிறப்பு முகாமானது இன்று நடைபெற்றது.


சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் இம்முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள் குறித்து பழங்குடி இன மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டும், ரேஷன் கார்டு பெயர் மாற்றம்,பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், ஆதார் கார்டு, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட சேவைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டது.


சிறப்பு முகாம் 


அதேபோல் இம்முகாமில் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறிதல் உள்ளிட்ட பிற மருத்துவ பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தேசிய தொல்குடி (பழங்குடி) மக்களுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு,அவர் தலைமையில் உலக கழிப்பறை தின உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. 




கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை


அதன் பின்னர் பழங்குடி இன மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று கொண்டு,அவ் கோரிக்கைகள் குறுத்து கேட்டறிந்தும்,பின்பு நல வாரிய உறுப்பினர் அட்டைகளையும் வழங்கினார்.


அப்போது கோரிக்கை மனு அளித்த பெரும்பாலன பழங்குடி இன மக்கள் தங்களக்கு ரேஷன் கார்டில் வேறு முகவரி உள்ளதால் தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகாமையிலுள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றால் தங்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதில்லை குறித்து நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியிடம் கோரிக்கை வைத்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் மாவட்ட வழங்கல் அதிகாரியை தனது செல்போனின் மூலம் தொடர்பு கொண்டு,உடனடியாக இம்மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கிடுமாறு உத்தரவிட்டும்,அதேபோல் ரேஷன் கார்டு முகவரி மாற்றத்திற்கென ஓர் சிறப்பு முகாமை நடத்தி முகவரிகளை மாற்றி தர வேண்டும் என அறிவிறுத்தினார்.


மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த மக்கள்


மேலும் இதேபோல் புதிதாக தங்களுக்கு அரசால் கட்டி கொடுக்கப்பட்ட குயிருப்பு பகுதிகளில் அருகாமையில் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்து பழங்குடி இன மக்கள் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்த பி.டி.ஓவை அழைத்து உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.




மாவட்ட ஆட்சியரின் இத்தகைய செயலை கண்டு திகைத்து போன பழங்குடி இன மக்கள், தாங்கள் கோரிக்கை வைத்த மறுகனமே அது குறுத்து உரிய நடவடிக்கையை உடண்டியாக் மேற்கொண்டதற்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துக்கொண்டனர்.


மேலும் முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன அலுவலர் தனலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.