விஜய் மாநாட்டில் கலந்து கொள்ளபவர்களுக்கு அறிவுரை வழங்கியது வரவேற்பதாகவும் , பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஒருங்கிணைப்பதில் சிரமம் உள்ளது என டி.டி.வி தினகரன் காஞ்சிபுரத்தில் பேசினார்.
காஞ்சிபுரம் - டிடிவி தினகரன்
காஞ்சிபுரம் மாநகர வடக்கு பகுதி அமமுக செயலாளர் கார்த்திகேயன் - ஷர்மிளா திருமணத்தில் கலந்து கொள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் டிடிவி தினகரன் காஞ்சிபுரம் வருகை புரிந்தார். அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது பின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அனைத்தும் தெரியும்
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கழக இல்ல திருமணத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சசிகலா மற்றும் ஓபிஎஸ் செல்லாக்காசு என கூறிய பொன்னையனுக்கு மூத்த உறுப்பினரான அவருக்கு கடந்த காலங்களில் நடைபெற்றது அனைத்தும் தெரியும் என கூறினார்.
விஜய் மாநாட்டிற்கு கர்ப்பிணிகள் மூத்தகுடிமக்கள், பள்ளி மாணவர்கள் வர வேண்டாம் என கூறியது குறித்து கேட்டபோது , இது வரவேற்கத்தக்க விஷயம் எனவும் நீண்ட தூர பயணம் அவர்களது உடல் நலக்குறைவு மற்றும் மாணவர்களின் திசைதிருப்பும் செயலாக மாறிவிடும் என தெரிவித்தார்.
அதிகார போதை
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களே ஒருபோதும் இணைக்கப்பட மாட்டார் என இபிஎஸ் கூறியது குறித்து கேட்டபோது, இரட்டை இலை இபிஎஸ் இடம் சிக்கிக்கொண்டு தற்போது பலவீனமாக ஆகி வருகிறது. அவரிடம் இருப்பதால் மட்டுமே அனைத்து நிர்வாகிகளும் அவருடன் உள்ளனர் எனவும், அதிகார போதை உள்ள அவரால் ஒருபோதும் இணைப்புக்கு சாத்தியம் இல்லை என்பது உறுதியாகி வருகிறது.
அதிமுகவிற்கு மூடு விழா
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பொதுமக்களின் கருத்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே உள்ள நிலையில் இதை அவர் தவிர்த்து வருகிறார். திமுகவின் பி டீமாக இபிஎஸ் செயல்பட்டு வருகிறார். வரும் 2026 தேர்தலில் அதிமுகவிற்கு மூடு விழா செய்துவிடுவார் பழனிசாமி என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில துணை பொது செயலாளர் செந்தமிழன் தேர்தல் பிரிவு செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.