தீபாவளியை முன்னிட்டு - வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் எ பட்டாசு கடைகளில், பொதுமக்கள் குவிய தொடங்கியுள்ளனர். 

Continues below advertisement


தீபாவளி பண்டிகை


தீபாவளி நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு கடைகளில் வியாபாரம் களைகட்டி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு கடையில் பெரிதளவில் விற்பனையாகாமல் வியாபாரம் குறைவாகவே இருந்தது.


பட்டாசு கடைகளில் குவியும் மக்கள்


இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் பட்டாசு கடைகளில் விற்பனை களைகட்டி வருகிறது. இந்த ஆண்டு சிறியவர் முதல் பெரியவர்கள் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல ரகங்களில் பல விதமான பட்டாசுகள் விற்பனைக்காக குவிந்துள்ளன.


காஞ்சிபுரம், வாலாஜாபாத் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து கண்கவரும் பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர். இதனால் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் பட்டாசுகளின் விற்பனை களைகட்டி வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 கடைக்கு அனுமதி


இதுகுறித்து விற்பனையாளர் தெரிவிக்கையில், இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ள நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வகையில் 200க்கும் மேற்பட்ட வகையான பட்டாசுகள் புது வரவாக வந்துள்ளன. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து காண்பதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு வியாபாரிகளும் விற்பனையாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 75 கடைகளுக்கு பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது‌.


பொதுமக்கள் செய்யக்கூடாதது என்ன ? 


பாதுகாப்பான தீபாவளிக்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை


1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.


2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.


தவிர்க்க வேண்டியவை


1. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.


2. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.


3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.