"உயிர் இல்லாதவர்களுக்கு வாக்கு இருக்கும்; உயிரோடு இருப்பவர்களுக்கு வாக்கு இருக்காது" - வாக்குப் பதிவு குளறுபடி குறித்து ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்"

Continues below advertisement

ஸ்ரீபெரும்புதூர் கிராம சபை கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சந்த வேலூர் பகுதியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பல ஒரு தளம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அதிகாரிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை ஆகியோர் தாமதமாக வந்ததாக கிராம இளைஞர்கள் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டையன் விவகாரத்திற்கு பதில்

இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார். அ.தி.மு.க. உட்கட்சிப் பிரச்சனை குறித்துப் பேசுகையில், தி.மு.க.வின் 'B டீம்' எனச் சொல்லப்படுவதால் தாம் பேசுவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுக்காத 'B-டீம்'மாக இருந்தால் தவறில்லை என்றும், "தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்துகொண்டு 'B' ஆகா யார் யார் இருக்கிறார்களோ, டெல்லியில் இருப்பவர்களுக்கு யார் காவடி தூக்குகிறார்கள்? தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக் கொடுத்தவர்கள் யார்?" எனவும் கேள்வி எழுப்பினார்.

Continues below advertisement

மேலும், ஜெயலலிதா இருந்தவரை ஜி.எஸ்.டி., நீட் தேர்வுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அதன்பிறகு இந்தத் திட்டங்களில் கையெழுத்திட்டு, மத்திய அரசுக்குப் பல்லக்கு தூக்கி மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்தவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் குற்றஞ்சாட்டினார். 

அஜித்குமார் கருத்துக்கு பதில்

நடிகர் அஜித்குமாரின் கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், எல்லோரும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இதுதான் ஆரம்பத்திலிருந்து நாங்கள் சொல்லி வருகிறோம், நடந்ததற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, "உயிர் இல்லாதவர்களுக்கு வாக்கு இருக்கும்; உயிரோடு இருப்பவர்களுக்கு வாக்கு இருக்காது" என்றும், இது ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதுதான் பீகாரில் நடந்தது என்றும் வாக்குப் பதிவில் நடக்கும் குளறுபடிகள் குறித்து ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.