காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஆந்திர மாநில அமைச்சரும் நடிகருமான ரோஜா சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின் அருகே இருந்த வீட்டுக்கு சென்ற ரோஜாவை காண ஆந்திர மாநில பக்தர்கள் புகைப்படம் எடுக்க ஒன்று கூடி வீட்டுக்கு வெளியே சேர்ந்து கொண்டனர்

 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்

 

தொடர் விடுமுறை காரணமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இன்று தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் பிரபல நடிகையுமான ரோஜா ஆந்திர மாநிலத்தில் இருந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்ய இன்று காலை வருகை தந்திருந்தார்.



 

ஆந்திரா மாநில பக்தர்கள், நடிகை ரோஜா

 

கோவிலுக்கு தரிசனம் செய்ய ஆந்திர அமைச்சர் வருகை தெரிந்த ஆந்திர மாநில பக்தர்கள் நடிகை ரோஜாவை சூழ்ந்து புகைப்படம் எடுக்க ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டனர். கோவிலில் இருந்து அங்கிருந்து புறப்பட்டு அருகே இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நேரம் தங்கி இருந்த நிலையில் அப்பகுதியில் ரோஜா இருப்பதை அறிந்த ஆந்திர மாநில பக்தர்கள் நடிகை ரோஜாவிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக  ஏராளமானோர் வீட்டை சூழ்ந்து வெளியே வர முடியாத அளவிற்கு முண்டியடித்துக் கொண்டனர். பின் பாதுகாப்பிற்காக இருந்த காவலர்கள் அங்கிருந்து ஆந்திர மாநில பக்தர்களை அப்புறப்படுத்தி நடிகை ரோஜாவை காரில் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.



 

பின் செய்தியாளரை சந்தித்த அமைச்சரும் நடிகையுமான ரோஜா, தெலங்கானா மற்றும் ஆந்திரா இரு மாநிலங்களிலும் மக்களுக்கு இரு வேறு விதமாக எதிர்பார்ப்புகள் உள்ளன. சந்திரபாபு நாயுடு கூறியது போல் தெலங்கானாவில் பவன் கல்யாண் தோற்றது போல் ஆந்திராவில் டெபாசிட் கூட வாங்க மாட்டார், சந்திரபாபு நாயுடு அவர்களை ஆந்திர மாநில மக்கள் திருப்பி அனுப்பிவிடுவார்கள். மாநிலங்களில் எந்த பேரிடர் இழப்புகள் நடந்தாலும் அதற்கு மாநில அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டுமே தவிர மத்திய அரசை குற்றம் சொல்லக்கூடாது என ஆந்திர மாநில அமைச்சர் நடிகருமான ரோஜா காமாட்சி அம்மன் கோவில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது தெரிவித்தார்.