அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள்

 

காஞ்சிபுரம் அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள, பெருந்தேவி தாயார் சன்னிதியை புதுப்பிக்க, 2010ல் அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்தது. அப்போது, சன்னிதி விமானத்திற்கு, 5 உபயதாரர்கள் வாயிலாக, 60 கிலோ தங்கத்தில், 12.53 கோடி ரூபாய் மதிப்பில், ஏழு அடுக்குகளில், தங்க ரேக் அமைக்கும் பணி மேற்கொள்ள, அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.

 

ஆனால், உபயதாரர்கள் வாயிலாக, 1 கிலோ தங்கம் மட்டுமே, கோவிலுக்கு வழங்கப்பட்டது. எனவே, அந்த பணி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, எலக்ட்ரோ பிளேட்டிங் முறையில், தங்க முலாம் பூசும் பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. உபயதாரர் ஒருவரால், தாயார் சன்னிதி விமானத்திலும், தங்க முலாம் பூசி தகடுகள் மீண்டும் பொருத்தப்பட்டன. இப்பணிக்கு செலவிடப்பட்ட தங்கம், செம்பு விபரத்தை பதிவேட்டில் பதிவு செய்து, அதன் நகலை கமிஷனருக்கு அனுப்ப வேண்டும். தங்க முலாம் பூசும் பணிகளை புகைப்படம் எடுக்க வேண்டும் என கமிஷனரின் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், அதை முறையாக தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.  இது தொடர்பான செய்தியினை புகார் மற்றும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில்,  புகாரின் பேட்டியுடன் ஏபிபி நாடு செய்தி நிறுவனம் செய்தி ஒளிபரப்பி இருந்தது.


புகார் தொடர்பாக, அறநிலையத் துறையின் திருவண்ணாமலை இணை ஆணையர் சுதர்சனம், வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று ஆய்வு செய்தார். தங்க மோசடி புகார் கொடுத்த, டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகியோரிடமும், இணை கமிஷனர் சுதர்சனம், புகார் தொடர்பாக பல்வேறு கேள்வி எழுப்பினார். இந்த விசாரணையில், தங்க மோசடி சம்பந்தமான பல்வேறு தகவல்களை, புகார் அளித்த இருவரும், அறநிலையத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.  திருவண்ணாமலை மண்டல இணை  ஆணையர்  டில்லி பாபு மற்றும் தினேஷ் ஆகிய இருவரிடம்  விசாரணை நடத்தினர். கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், நகை சரிபார்ப்பு அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.