தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காஞ்சிபுரம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காஞ்சிபுரம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணிதம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களை செவித்திறன் குறையுடையோருக்கான மாணவ/மாணவியர்களுக்கு பயிற்றுவிக்க மாதம் ரூ.15,000/- மதிப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு கீழ்காணும் கல்வித் தகுதியுடன் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.


கணித ஆசிரியர் பட்டதாரி பணியிடத்திற்கான தகுதி:



  1. B.Sc., or M.Sc., Maths with B.Ed.

  2. Senior Diploma in Teaching  the  Deaf or B.Ed Special Education.


வரலாறு ஆசிரியர் பட்டதாரி பணியிடத்திற்கான தகுதிகள்:



  1. B.A History or M.A History with B.Ed

  2. Senior Diploma in Teaching  the Deaf or B.Ed Special Education.


மேற்கண்ட பட்டதாரி பணியிடங்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இனத்தவரும் விண்ணப்பிக்கலாம். வயது உச்ச வரம்பு இல்லை. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் தகுந்த கல்வி சான்றிதழ் நகல்களுடன் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி , சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு 27.12.2023 மாலை 5  மணிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி  தெரிவித்துள்ளார்.