Zomato Controversy: இந்தியாவில் உள்ள உணவு விநியோக தளங்களில் அதிகப்படியான பயனர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் சோமேட்டோ நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
வீடியோ வெளியிட்ட சோமேட்டோ
இந்தியாவில் முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனங்கள செய்யும் விளம்பரங்கள் அவ்வப்போது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் ஸ்விக்கி நிறுவனம் ஒரு சர்ச்கையில் சிக்கியது. ரம்ஜான் பண்டிகையின்போது ஆடுகளை வெட்ட வேண்டாம் என்று விளம்பரம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஸ்விக்கி நிறுவனம் இந்துபோபியாவில் ஈடுபடுகிறது என தெரிவித்துள்ளது. அதாவது இந்து மதத்தின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தினை செய்கிறது என பலர் குற்றம் சாட்டினர்.
சர்ச்சை
அந்த வரிசையில் தற்போது ஸ்விக்கிக்கு போட்டியாக இருக்கும் சோமேட்டோ நிறுவனம் சிக்கியுள்ளது. அதாவது, உலக சுற்றுக்சூழல் தினத்தை முன்னிட்டு சோமேட்டோ நிறுவனம் ஒரு விழிப்புணர்வு விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கண்டனங்கள் குவித்து வருகிறது. மேலும், #Boycottzomato என்ற ஹேஷ்டேக்கும்க டிரண்டானது.
அந்த வீடியோவில், 2001ஆம் ஆண்டு ஆமிர்கான் நடிப்பில் வெளியான 'லகான்' படத்தில் 'கச்ரா' என்ற தலித் கதாபாத்திரத்தில் ஆதித்ய லக்கிய என்பவர் நடித்திருக்கிறார். இவரை மேஜையாகவும், விளக்கு, பூந்தொட்டி, காகிதம் போலவும் சித்திரிக்கப்பட்டு, அதில் இத்தனை கிலோ குப்பைகளால் பொருட்கள் உருவாகிறது என்பதை விளக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.
’லகான்’ படத்தில் தலித்தாக காட்டப்பட்டட கதாபாத்திரத்தை இந்த வீடியோவில் குப்பைப் போல சித்திரித்திருக்கின்றனர் என்று பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஜாதிய பார்வையுடன் விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளது. குறிப்பாக ’கச்ரா' என்றால் இந்தியில் ’குப்பை' என்று பொருள்.
மன்னிப்பு கேட்ட சோமேட்டோ
இந்த வீடியோவிற்கு விமர்சனங்கள் எழுந்ததால் சோமேட்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை நீக்கி அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளது. அதன்படி, "உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகைச்சுவையான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவே இந்த வீடியோ வெளியிடப்பட்டது.
இதில் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. குறிப்பிட்ட சமூகம் மற்றும் தனி நபர்களின் உணர்வுகளை நாங்கள் புண்படுத்தியிருக்கலாம். எனவே இந்த வீடியோ நாங்கள் நீக்கிவிட்டோம்" என்று விளக்கம் தெரிவித்துள்ளது சோமேட்டோ.