பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோஷூட் தான் இப்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி உள்ளது. ரன்வீர் சிங் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது பன்முக நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்வார்.


சமீபத்தில் இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 83 திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. இதில் ரன்வீர் சிங் அப்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில் தேவ் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்ததை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. 


சினிமாவில் நடிக்கும் அதே சமயம் அவருக்கு மாடலிங் மீதும் ஈர்ப்பு அதிகம். அதற்காக அவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அதற்காக தனது ஹேர் ஸ்டைல், ட்ரெஸ்ஸிங் என பல வெரைட்டி காட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடத்திய நிர்வாணா போட்டோஷூட் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக 1972ஆம் ஆண்டு அமெரிக்காவின் காஸ்மோபோலிட்டன் இதழுக்கு ஹாலிவுட் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் (Burt Reynolds) கொடுத்த புகழ்பெற்ற நிர்வாண ஃபோட்டோஷூட்டை நினைவுகூறும் வகையில் ரன்வீர் சிங் நிர்வாண ஃபோட்டோஷூட்டை நடத்தியிருந்தார்.


சமூகவலைதளங்களில் அவரின் இந்த துணிச்சலான செயலை சிலர் விரும்பினாலும் பலர் மீம்ஸ் மூலம் ரன்வீரை காயப்படுத்தி வருகின்றனர். ஒரு பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக அவர் கொடுத்த போஸ் தான் இந்த வைரலாக நிர்வாண போஸ்.  


இதையடுத்து, பெண்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு, நாடு முழுவதும் பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இந்த நிலையில், திரைப்பட நடிகரின் சர்ச்சைக்குரிய போட்டோ ஷூட்டுக்கு மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அவருக்கு துணி நன்கொடை இயக்கத்தை ஏற்பாடு செய்து அவரது போட்டோஷூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 






நேகி கி திவார் என்ற சமூக அமைப்பானது பழைய ஆடைகளை மக்களிடம் இருந்து சேகரித்து ரன்வீர் சிங்கிற்கு கொடுக்கும் விதமாக ஒரு பெரிய பெட்டியை வைத்துள்ளது. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் துணிகளை சேகரிக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு பெட்டியை வைத்து, "மேரே ஸ்வச் இந்தோர் நே தானா ஹை, தேஷ் சே மான்சிக் கச்ரா பி ஹதனா ஹை (இந்தூர் நாட்டில் இருந்து ரன்வீரின் மனக் கழிவுகளை அகற்ற முடிவு செய்துள்ளோம்)" என்று எழுதப்பட்ட பேனரை வைத்துள்ளனர்.


ரன்வீர் சிங் ஒரு இளைஞர் ஐகான் என்றும், அவரை ஏராளமான இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பின்  இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் கூறினர். இந்த வகை போட்டோஷூட் 'மலிவான புகழ்' என்றும் 'இன்றைய இளைஞர்களை பாதிக்கலாம்' என்பதை சுட்டிக்காட்டி இதனை குறைக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண