செய்திகளின் மீதான நம்பிக்கைத்தன்மை குறைந்து கொண்டே வருவதாகவும், குறிப்பாக, இளைய தலைமுறையினர், செய்திகளை படிக்காமல் தவிர்ப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள 2022 ஆண்டுக்கான டிஜிட்டல் செய்தி அறிக்கையில் இதுபோன்ற பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


பல்வேறு நாடுகளில் செய்தி எப்படி உள்வாங்கப்படுகிறது என்பது குறித்து இந்த அறிக்கை விரிவாக அலசுகிறது. இணையம் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு 46 சந்தைகளில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில், பத்திரிகைத்துறை, பொது மக்களுக்கிடையேயான தொடர்பு மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் செய்திகளின் மீதான நம்பிக்கைத்தன்மை குறைந்து கொண்டே செல்கிறது என்றும் பாரம்பரிய செய்தி நிறுவனங்களில் செய்திகள் படிப்பது குறைந்து கொண்டே செல்கிறது என்றும் அறிக்கை கூறுகிறது. பாரம்பரிய செய்தி நிறுவனங்களின் தாக்கம் குறையும் அதே சமயத்தில் அந்த இடத்தை இணைய செய்தி நிறுவனங்கள் பிடிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல, செய்திகளை படித்து வந்தவர்கள் அதை தற்போது தவிர்த்து வருவது அதிகரித்து வருவதாகவும் அதுவும் குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களை தவிர்ப்பது அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. செய்திகளை தவிர்ப்பதற்கான காரணங்கள் என்ன என கேட்கப்பட்டதற்கு, அரசியல், கரோனா குறித்து ஒரே மாதிரியான செய்திகள் வருவதால் அதை படிப்பதற்கான உற்சாகம் குறைந்துள்ளது என 43 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.


செய்திகளை படித்து சோர்வடைந்துவிட்டதாக 29 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். செய்திகள் மீதான நம்பிக்கைத்தன்மை குறைந்துவிட்டதாக 29 சதவிகிதத்தினர் கருத்து பகிர்ந்துள்ளனர். கணக்கெடுப்பு எடுக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு சதவிகிதத்தினர் (36%), குறிப்பாக 35 வயதுக்கு குறைவானவர்கள், செய்திகள் படிப்பதால் தங்களின் மனிநிலை பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். 


தவிர்க்கக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களுக்கு செய்திகள் இட்டு செல்வதால் அதை தவிர்ப்பதாக 17 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். செய்திகள் படிப்பதால் அதிகாரமற்றவர்களாக உணர்வதாக 16 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். 


இந்தியாவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பாரம்பரிய செய்தி நிறுவனங்கள் மீது மக்கள் அதிக அளவிலான நம்பிக்கை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அரசியல்வாதிகளின் செல்வாக்கு இல்லாமல் செய்தி நிறுவனங்கள் இயங்கு வருவதாக 36 சதவிகிதத்தினர் கருதுகின்றனர். தொழிலதிபர்களின் செல்வாக்கு இல்லாமல் செய்தி நிறுவனங்கள் இயங்கு வருவதாக 35 சதவிகிதத்தினர் கருதுகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண