பீகார் அமைச்சர் ராம் சூரத் ராய் வெள்ளிக்கிழமை முசாஃபர்பூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய அவர் பிரதமர் தலைமையின் கீழ் கொரோனா தொற்றுநோயின்போது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா நடத்தியது என்றும் மேலும் இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றி அவர் பெருமை சேர்த்ததாகவும் ராம் சூரத் ராய் பேசியுள்ளார்.



"நீங்கள் உயிருடன் இருந்தால், அந்த பெருமை நரேந்திர மோடிக்கே சேரும். அவர் கொரோனா தொற்றுநோயின்போது தடுப்பூசியை உருவாக்கி அதனை இலவசமாக நாட்டிலுள்ள மக்களுக்கு வழங்கினார்" என்று முசாபர்பூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராம் சூரத் ராய் பேசியுள்ளார்.






தொற்றுநோயின் பொருளாதார தாக்கத்தால் பல நாடுகள் இன்னும் போராடி வருகின்றன, ஆனால் இந்தியாவில், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக பீகார் மாநில பாஜக தலைவரான ராம் சூரத் பேசியுள்ளார்.


"பாகிஸ்தானியர்களுடன் பேசுங்கள் - அங்குள்ள சூழ்நிலையை நாங்கள் தொலைக்காட்சி அறிக்கைகள் மூலம் பார்த்தோம். இந்தியர்களாகிய நாம் இன்னும் நிம்மதியாக இருக்கிறோம்," என்று ராம் சூரத் ராய் மேலும் கூறியுள்ளார்.


நாட்டில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி 18 மாதங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜூலை 17 அன்று நாடு 200 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்கும் மைல்கல்லைக் கடந்தது.


சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜூலை 15 முதல் செப்டம்பர் 30, 2022 வரை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச முன்னெச்சரிக்கை டோஸ்களை வழங்க, 'கோவிட் தடுப்பூசி அம்ரித் மஹோத்சவா' என்ற சிறப்பு இயக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அண்மையில்தான் மத்தியப்பிரதேசத்தின் சாகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒரே சிரிஞ்ச் மூலம் 30 குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக நர்சிங் மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


சாகர் நகரில் உள்ள பள்ளியில் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இதில் நர்சிங் கல்லுாரி மாணவர் ஜிதேந்தர் அஹிர்வார் தடுப்பூசி செலுத்த நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது, ஒரே ஊசியை பயன்படுத்தி, 39 மாணவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தினார்.


இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு என்றார். பதிவு செய்த போலீசார், இது தலைமறைவாக இருந்த ஜிதேந்தரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதற்கிடையே, ஜிதேந்தர் அஹிர்வார் வெளியிட்டுள்ள 'வீடியோ'வில், ”என் துறைத் தலைவர் தான் என்னிடம் ஒரே ஒரு சிரிஞ்ச் கொடுத்தார்கள், அதை வைத்தே தடுப்பூசி போடச் சொன்னார்கள். அதனால்தான் ஒரே சிரிஞ்சில் இருந்து 30 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டேன்" என அவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.