மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) சாலைகளில் கார்கள் நிறுத்தி வைத்திருப்பதால் ஏற்படும் இடப்பற்றாக்குறையை தடுக்க விளையாட்டுத்தனமான ஒரு ஐடியா பற்றி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார். 


தவறான கார் பார்க்கிங்- புது சட்டம்:


நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் சில சாலைகளின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். வீடுகளில் கார்கள் நிறுத்தி வைக்க இட வசதியெல்லாம் இல்லை. நம்மில் சிலரோ காரை எங்கே நிறுத்துவது என்று எண்ணி கார் வாங்கும் திட்டத்தை தள்ளிப்போடுவோம் இல்லையா. ஆனால், பல்வேறு மாநிலங்களில் கார்களுக்கு வீடுகளில் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லையென்றாலும், வீட்டின் வாசலில், அப்பார்ட்மெண்ட் வாசலில் எல்லாருக்கும் ஒரு இடத்தை ஒதுக்கிக்கொண்டு நிறுத்தி விடுவார்கள். 


இதனால், சாலைகளின் பரப்பரளவு குறைந்துவிடும். இதனை தடுக்கும் வகையில், யாரெல்லாம் தவறாக சாலைகளில் கார்களை பார்க் செய்திருக்கும் செய்தினை ஃபோட்டோ எடுத்து அனுப்புகிறவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 500 வழங்கப்படும் என்று தெரிவித்தார். 


Industrial Decarbonization Summit நிகழ்ச்சியில் பேசுகையில், சாலைகளில் கார்களை நிறுத்தி வைத்திருப்பவர்களு அபராத தொகையாக ரூ.1000 வசூலிக்கப்படும். இப்படி பார்க் செய்திருக்கும் கார்களை புகைப்படம் எடுத்து அனுப்புபவர்களுக்கு அதிலிருந்து ரூ. 500 வழங்கப்படும் என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார். 


மேலும், இந்தியாவில் கார் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், அமெரிக்காவில் சுகாதார பணியில் ஈடுபடுவோரிடம் கூட கார் இருக்கும். போலவே, இந்தியாவிலும் அனைவரிடமும் கார் இருக்கும் நிலை உருவாகும் என்றார். 


இந்தியாவிற்கு எலக்ட்ரானிக் வாகனங்கள்தான் தேவை. 


நாக்பூரில் என் வீட்டில் சமையல் செய்யும் நபரிடம் இரண்டு கார் இருக்கிறது, நான்கு பேர் இருக்கும் குடும்பத்தில் ஆறு கார்கள் இருக்கிறது, இன்றைய நிலமை இதுதான். புது டெல்லியில் உள்ள மக்கள் கொடுத்துவைத்தவர்கள், கார் பார்க்கிங்கிற்கு ஓர் இடத்தை ஒதுக்காமல், கார்களை சாலையிலே நிறுத்தி வைக்கிறார்கள். 


இந்தியாவில் கார் வாங்குவோர் எண்ணிக்கை கொரோனா காலத்திலேயே அதிகரித்து விட்டது. இந்தியா முழுவதும் எலக்ட்ரானிக் கார் பயன்பாடு இருக்கும் நிலை விரைவில் உருவாகும் என்றும் தெரிவித்தார். இதற்கு டிவிட்டரில் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள். 






 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண