ஜம்மு கஷ்மீரில் பணிக்கு வராத 112 அரசு மருத்துவர்களை அம்மாநில அரசு நீக்கியுள்ளது.
அதிரடி உத்தரவு :
ஜம்மு கஷ்மீரில் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 112 மருத்துவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிக்கு வருவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பிற நிபுணர்கள் பணிக்கு வராமல் இருந்திருக்கின்றனர், மேலும் சிலர் தகுதிகாண் காலத்தின்போது (probation period) பணிக்கு வரவில்லை என தெரிகிறது. இதனால் பணிக்கு வராத அந்த 112 மருத்துவர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறையின் தொடர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் :
முன்னதாக இது குறித்த செய்திகள் வெளியானதும் நிர்வாகத் துறை மற்றும் சுகாதாரப் பணி இயக்குநர்கள் , தொடர்ந்து பணியை சரியான முறையில் தொடர வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளனர். ஆனாலும் அதனை அந்த மருத்துவர்கள் சரியாக பின்பற்றாததால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மனோஜ்குமார் திவேதி உத்தரவு :
சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் மனோஜ் குமார் திவேதி தனது உத்தரவில்" மருத்துவர்களை நிர்வகிக்கும் வழக்கின் விதி நிலையைக் கருத்தில் கொண்டு , முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டபோதும், அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட போதிலும், இந்த மருத்துவர்கள் தங்கள் பணியைத் தொடராததால், அவர்களின் இந்தச் செயல் ஒரு தன்னார்வச் செயல் என புரிந்துக்கொள்ள முடிகிறது. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கடமைகளில் இருந்தும் அவர்கள் தங்களது சேவையை முறையாக செய்யாத காரணத்தால் அவர்கள் சேவையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனுப்பட்ட நோட்டிஸிற்கு மருத்துவர்கள் பதிலளிக்கவில்லை. மேலும் அவர்கள் தங்களது பணிக்கு திரும்பவும் இல்லை என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்கள் :
இப்போது , ஜே & கே சிவில் சர்வீசஸ் ஒழுங்குமுறையின் பிரிவு 113 மற்றும் பிரிவு 128-இன் படி, பணியில் இல்லாத மருத்துவர்களின் சேவைகள் நிறுத்தப்படுகிறது, என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் 2005 முதல் 2020 வரை பல்வேறு காலகட்டங்களில் பணிக்கு வரவில்லை.112 மருத்துவர்களில் 11 மருத்துவ அதிகாரிகளும் அடங்குவர் அவர்கள் 2005-ஆம் ஆண்டு முதல் பணியில் இருந்து விலகி உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்