நமோ பாரத் ரயில் சேவை:
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல ரயில்கள் மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் 'நமோ பாரத்' ரயில். இந்த நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்து 2022ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
டெல்லியை மையமாகக் கொண்டு சுற்றியுள்ள நகரங்களை செமி விரைவு ரயில் சேசை மூலம் இணைக்கும் இத்திட்டத்தில் முதற்கட்டமாக டெல்லியில் இருந்து காசியாபாத் வழியாக மீரட் வரை சென்றடைகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில், மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்கக் கூடியது.
எனினும், இது 160 கிமீ வரையிலான வேகத்தில் மட்டுமே இது இயக்கப்படும். முழுமையாக குளிரூட்டப்பட்ட இந்த ரயில், பயணிகள் படிப்பதற்காக இதழ்கள், கால்கள் வைக்கும் இடத்தில் மிதியடி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இதில் ஒரு பெட்டி பிரிமியம் பெட்டியாகவும், ஒரு பெட்டி மகளிருக்கானதாகவும் இருக்கும்.
"சிறப்பான வீடியோ”
இந்த நிலையில், நமோ பாரத் ரயிலின் வீடியோவை எக்ஸ் தளத்தில் மோகித் குமார் என்பவர் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், "வியக்க வைக்கும் நமோ பாரத்தின் ரயிலின் காட்சிகள்" என்ற கேப்ஷனுடன் நமோ பாரத் ரயிலின் வீடியோவை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவிற்கு பிரதமர் மோடி பதிலளித்திருக்கிறார். அதன்படி, "சிறப்பான வீடியோ.
புதிய இந்தியாவுக்கான நல்ல பார்வையை உங்களின் பதிவு தருகிறது. இணைந்து கட்டமைக்கிறோம்!" என்றார். பிரதமர் மோடியின் பதிவிற்கு மோகித் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதன்படி, "நீங்கள் என்னோட பதிவிற்கு பதிலளித்தது எனக்கு மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. நன்றி.
அனைத்து படைப்பாளிகளையும் பாராட்டுவது மட்டுமல்லாமல் ஊக்குவிப்பதற்காக நன்றியை தெரிவிக்கிறேன். உண்மையிலேயே இன்று நல்ல நாள்" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவுகள் அனைத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க