மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீசுவதை வட மாநில விவசாய சங்கத்திபர் தடுத்து நிறுத்தினர். ஹரித்துவாரில் கங்கை நதியில் பதக்கங்களை வீசச் சென்ற மல்யுத்த வீரர்களை சமாதானம் செய்தனர் விவசாயிகள். விவசாய சங்க தலைவர் நரேஷ் திகைத் தலைமையில் நிர்வாகிகள் பலர் வீரர்களை சமாதானப்படுத்த ஹரித்துவார் வந்துள்ளனர்.
5 நாட்களில் பிரச்சனைக்கு தீர்வு - விவசாயிகள் உறுதி
பிரச்சனைகளை தீர்க்க 5 நாள் அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் விவசாய சங்க தலைவர் நரேஷ் திகைத் வேண்டுகோள் விடுத்தார். அதனை தொடர்ந்து மல்யுத்த வீரர்களிடம் இருந்து பதக்கங்களை வாங்கிக் கொண்டார். விவசாய சங்க தலைவர் விடுத்த கோரிக்கையை அடுத்து பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாள் அவகாசம் அளித்துள்ளனர்.