ஆந்திர மாநிலத்தில் 41,000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப் பழமையான நெருப்புக் கோழிக் கூட்டை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நெருப்புக் கோழி கூட்டின் படிவங்கள்:
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவானது, ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளது. அது என்னவென்றால் ஒரு நெருப்புக் கோழி கூட்டின் படிவங்களை கண்டுபிடித்துள்ளது. இது உலகின் மிகப் பழமையான நெருப்புக் கூடு என்று கூறப்படுகிறது, இது 41,000 ஆண்டுகள் பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஒரே இரவில் சுற்றுலா தளம்:
பிரகாசம் மாவட்டத்தில் உள்ள புதைபடிவங்கள் நிறைந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியின் போது நம்பமுடியாத கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்களுடன் வதோதரா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய சர்வதேச குழுவானது, 900 தீக்கோழி முட்டைகளைக் கொண்ட ஒரு பெரிய கூட்டைக் கண்டுபிடித்தது.
குவிந்த சுற்றுலா பயணிகள்:
இந்த தொல்பொருள் கண்டுபிடிப்பையடுத்து, பலர் இப்பகுதிக்கு பார்வையிட வருகை புரிந்துள்ளனர். இதையடுத்து, இந்த மாவட்டம், ஒரே இரவில் மிகப் பெரிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. தொல்லியல் மற்றும் பண்டைய வரலாற்றுத் துறையின் உதவிப் பேராசிரியரான தேவார அனில்குமார் கருத்துப்படி, “இந்தியாவில் பெருவிலங்கு இனங்களின் அழிவைப் புரிந்துகொள்வதில், இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய தருணத்தை உணர்த்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 1x1.5 மீட்டர் பரப்பளவில் கிட்டத்தட்ட 3,500 நெருப்புக் கோழி முட்டை ஓடுகளின் படிவங்கள் இருப்பது ,தென்னிந்தியாவில் நெருப்புக் கோழிகளின் வரலாற்று இருப்பை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகின் மிகப் பழமையான நெருப்புக் கோழி கூடு இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது எனவும் அனில் குமார் தெரிவித்தார்.